இந்தியாவில் உள்ள 23 அஞ்சல் வட்டங்களில் மொத்தம் 21,413 காலியிடங்கள் நிரப்பபட உள்ளது. இதில் கிளை போஸ்ட் மாஸ்டர் (பிபிஎம்), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்) மற்றும் டக் சேவக் பதவிகள் உள்ளிட்ட பணிகளும் அடங்கும்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி, உத்தர பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, ஜம்மு & காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, வடகிழக்கு, ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் காலியிடங்கள் உள்ளன.
இதில் உத்தரப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான காலியிடங்களும் தொடர்ந்து தமிழகத்திலும் அதிக காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும். மேலும், அடிப்படை கணினி செயல்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும். தகுதி உள்ளவர்கள் indiapostgdsonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பார்வையிட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி
விண்ணப்பிப்பதற்கான செயல்முறை பிப்ரவரி 10 துவங்கி மார்ச் 3, 2025 நடைபெறுகிறது.மேலும், விண்ணப்பதாரர்கள் மார்ச் 6 முதல் மார்ச் 8, 2025 வரை திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 18-40 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்
ண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை
இந்திய அஞ்சல் துறை GDS ஆட்சேர்ப்பு தேர்வு செயல்முறை தேர்வு தகுதி அடிப்படையில், எந்த தேர்வும் நடத்தப்படாது. 10 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு பல சுற்றுகனாக வெளியிடப்படும். சுமார் 7 முதல் 8 தகுதிப் பட்டியல்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
- indiapostgdsonline.gov.in என்ற இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
- பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் உள்ளிட்ட அடிப்படை விவரங்களை பதிவிட்டு கல்வி மற்றும் தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும்.
- தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைச் சமர்ப்பிக்கவும்.
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்
- எதிர்கால குறிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்ட பக்கத்தை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இதையும் படிங்க நிதி ஆயோக் இன்டென்ஷிப்.. மாணவர்கள் எப்படி விண்ணப்பிப்பது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்