UGC Equity Regulations: ஒவ்வொரு கல்லூரி/பல்கலைக்கழகத்திலும் சமத்துவ மையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட யூ.ஜி.சி விதிகளுக்கு எதிராக பொது பிரிவு மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
UGC Equity Regulations: ஒவ்வொரு கல்லூரி/பல்கலைக்கழகத்திலும் சமத்துவ மையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட யூ.ஜி.சி விதிகளுக்கு எதிராக பொது பிரிவு மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

Published on: January 27, 2026 at 11:59 pm
புதுடெல்லி, ஜன.27, 2026: முனைவர் ஆராய்சி ரோஹித் வேமுலா (2016) மற்றும் பயல் தட்வி (2019) ஆகியோர் சாதி அடிப்படையிலான தொல்லைகளால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு, அவர்களின் தாய்மார்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, 2026 யுஜிசி (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல்) ஒழுங்குமுறைகள் அமைக்கப்பட்டன.
அதாவது, இவை இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடுக்கும் புதிய சட்டப்பூர்வ விதிகள் ஆகும். இவை 2012-இல் இருந்த பழைய வழிகாட்டுதல்களை மாற்றி, பட்டியல், பழங்குடி, மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இந்த விதிகளின் படி, ஒவ்வொரு கல்லூரி/பல்கலைக்கழகத்திலும் சமத்துவ மையம் அமைக்க வேண்டும். பட்டியல், பழங்குடி, ஒ.பி.சி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
மேலும், மாணவர்கள் ஆன்லைன் போர்டல், 24×7 ஹெல்ப்லைன் மூலம் புகார் அளிக்கலாம். விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு UGC அங்கீகாரம் ரத்து, நிதி நிறுத்தம், அபராதம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த விதிகள் “பொது பிரிவு மாணவர்களுக்கு எதிரானவை” என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். அதாவது, சாதி பாகுபாட்டின் வரையறை பட்டியல், பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கிறது; மற்ற மாணவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, விதிகள் அரசியலமைப்புக்கு முரணானவை என வாதிடப்படுகிறது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி முழுவதும் உள்ள பல கல்லூரி மாணவர்கள் யூ.ஜி.சி தலைமையகத்தின் முன் போராட்டம் நடத்தினார்கள். அப்போது, “பொது பிரிவு” மாணவர்கள் மீது அநியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என அவர்கள் விமர்சித்தனர்.
இதையும் படிங்க: ராகுல் காந்திக்கு மூன்றாம் வரிசையில் இருக்கை.. காங்கிரஸ் கடும் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com