guidance program: தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு வழிகாட்டுதல் கருத்தரங்கம் இன்று (சனிக்கிழமை) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
guidance program: தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு வழிகாட்டுதல் கருத்தரங்கம் இன்று (சனிக்கிழமை) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
Published on: May 3, 2025 at 8:45 pm
தூத்துக்குடி, மே 3 2025: காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் தேர்வில் வெற்றி பெற ஊக்கப்படுத்தும் நிகழ்வாக இன்று (மே 3 2025) தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏ.வி.எம் கமலவேல் மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சார்பு ஆய்வாளர் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் படித்து தேர்வில் வெற்றி பெறுமாறு வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் C. மதன், மாவட்ட காவல் அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரி மற்றும் அமைச்சு பணி அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : எல்.ஐ.சி AAO தேர்வு 2025; வயது, கல்வி தகுதியை செக் பண்ணுங்க..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com