Actor Yogi Babu: நடிகர் யோகி பாபு நடிகை வேதிகா நடிப்பில் உருவாகியுள்ள கஜானா 2025 மே மாதம் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Actor Yogi Babu: நடிகர் யோகி பாபு நடிகை வேதிகா நடிப்பில் உருவாகியுள்ள கஜானா 2025 மே மாதம் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Published on: May 7, 2025 at 1:23 pm
Updated on: May 7, 2025 at 1:25 pm
சென்னை மே 7 2025: நடிகர் யோகி பாபு நடிகை வேதிகா நடித்துள்ள புதிய படம் கஜானா. பிரபதீஷ் சாம்ஸ் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பட வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது. அப்போது இந்த படத்தின் இயக்குனர், ” யோகி பாபு நடித்துள்ள கஜானா திரைப்படம் மிக அழகாக உருவாகியுள்ளது என்றும் ஹாலிவுட் க்கு இணையாக உள்ளது என்றும் கூறினார்.
மேலும் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் அதிலும் யோகி பாபு நடிக்கிறார் என்றார். முன்னதாக தயாரிப்பாளர் ராஜா என்பவர் யோகி பாபு குறித்து தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சை ஆகின. இந்தப் படத்தின் வெளியீட்டு விழாவில் நடிகர் யோகி பாபு கலந்து கொள்ளவில்லை. ₹7 லட்சம் கொடுத்திருந்தால் யோகிபாபு கலந்து கொண்டிருப்பார் என தயாரிப்பாளர் ராஜா தெரிவித்தார்.
தயாரிப்பாளர் ராஜாவின் கருத்துகளுக்கு உடனடியாக இயக்குனர் வருத்தம் தெரிவித்தார். இதற்கிடையில் படம் குறித்து பேசிய இயக்குனர், ” கஜானா படத்தின் மாயாஜால காட்சிகள் மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும்; படத்தில் யானை புலி பாம்பு சாகச காட்சிகளும் உள்ளன. படம் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: நான்தான் ஷாருக்.. வெளிநாட்டு மீடியாக்களிடம் அறிமுகமான ஷாருக்கான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com