பிக்கிள்பால் போட்டியில் வழுக்கி விழுந்த அமிர் கான்.. ரசிகர்கள் ஷாக்!

Aamir Khan slips on the WPBL court: மும்பையில் நடைபெற்ற பிக்கிள்பால் போட்டியில் மைதானத்தில் நடிகர் அமிர் கான் வழுக்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Published on: February 9, 2026 at 2:29 pm

மும்பை, பிப்.9, 2026: மும்பையில் நடைபெற்ற உலக பிக்கிள்பால் லீக் 2026 நிகழ்வில் சனிக்கிழமையன்று சூப்பர் ஸ்டார் அமிர் கான் ரசிகர்களுடன் இணைந்து நட்பு போட்டியில் பங்கேற்றார். அப்போது, போட்டியின் நடுவில் அவர் மைதானத்தில் வழுக்கி விழுந்ததால் சிறிது எதிர்பாராத பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தனது விளையாட்டு மனப்பாங்கை வெளிப்படுத்திய அமிர் கான், உடனே எழுந்து, சிரித்தபடி மீண்டும் விளையாட்டைத் தொடர்ந்தார். இதனால் அங்கு இருந்த ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.

ஜியோ வேர்ல்ட் கார்டனில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர் அமிர் கான், மூன்று ரசிகர்களுடன் இரண்டு காட்சிப் போட்டிகளில் கலந்து கொண்டார். அன்றைய தினம் உலக பிக்கிள்பால் லீக் 2026 இரண்டாவது சீசனின் அரையிறுதி போட்டிகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. அதில்,நடிகர் அமிர் விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென சமநிலை இழந்து தரையில் விழுந்து, பின்னர் தனது கூட்டாளியின் உதவியுடன் எழுந்து விளையாடும் காட்சி உள்ளது.

இதையும் படிங்க: அஜித்தை சந்தித்த அனுபவம்.. ‘அட்ரினலின் ரஷ்’.. சிவகார்த்திகேயன் இன்ஸ்டாகிராம் பதிவு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com