Vetri Maaran: இன்றைக்கு எல்லாமே Propaganda (பரப்புரை)தான் என துரந்தர் படத்தை பிரபல இயக்குனர் வெற்றி மாறன் விமர்சித்துள்ளார்.
Vetri Maaran: இன்றைக்கு எல்லாமே Propaganda (பரப்புரை)தான் என துரந்தர் படத்தை பிரபல இயக்குனர் வெற்றி மாறன் விமர்சித்துள்ளார்.

Published on: March 29, 2026 at 10:07 pm
சென்னை, மார்ச் 29, 2026: “இன்றைக்கு எல்லாமே Propaganda-வாக மாறுகிறது. அந்த Propaganda நினைவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்டது” என துரந்தர் திரைப்படம் குறித்து பிரபல இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த நீளிரா பட நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நினைவுகள் என்பது நிலையற்றது. நம் எல்லாருக்குமே தெரியும் Demonetisation-னில் யார் அதிகம் பாதிக்கப்பட்டது என்று எவ்வளவு பேர் பணத்தை பெற வரிசையில் நின்று செத்து போனார்கள் என தெரியும். ஆனால் அந்த தாக்கத்தை எளிமையாக மாற்ற முடிகிறது” என்றார்.
மேலும், “அவதூறு பிரசாரத்துக்கு எதிராக நாம் செய்ய வேண்டியது இது போன்ற படங்களை எடுப்பது. அதன் மூலம் நம் நினைவுகளை சரியான வகையில் வடிவமைக்க உரையாடலை உயிர்போடு வைத்திருக்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.
துரந்தர் -2 படம்
துரந்தர் 2 திரைப்படத்தின் வசூல் அலை பாக்ஸ் ஆபிஸில் வலுவாக தொடர்கிறது. படம் 11வது நாளிலும் உறுதியான வசூலை தக்கவைத்துள்ளது. தினசரி வசூலில் இயல்பான ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், ஆதித்யா தரின் இயக்கத்தில் உருவான இந்த படம், ஆண்டின் மிகப்பெரிய திரையரங்கு வெற்றிகளில் ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், தொழில்துறை கண்காணிப்பாளரான Sacnilk வெளியிட்ட தகவலின்படி, துரந்தர் தி ரிவென்ஞ் திரைப்படம் இரண்டாவது சனிக்கிழமையன்று 18,820 காட்சிகளில் ரூ. 62.85 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் படத்தின் மொத்த நிகர வசூல் ரூ. 778.77 கோடியாக உயர்ந்துள்ளது. உலகளாவிய வசூல் தற்போது ரூ. 1,226.44 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் விநாயக் மகாதேவன்? உருவாகிறதா மங்காத்தா-2? கோடம்பாக்க நிலவரம் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com