சிம்பு, தனுஷூடன் புதிய படம்? மௌனம் கலைத்த வெற்றி மாறன்!

Vethimaran: நடிகர்கள் சிம்பு மற்றும் தனுஷூடன் புதிய படத்தில் இணைவது குறித்து மௌனம் கலைத்துள்ளார் டைரக்டர் வெற்றி மாறன்.

Published on: June 24, 2025 at 3:24 pm

சென்னை, ஜூன் 24 2025: நடிகர்கள் சிம்பு மற்றும் தனுஷூடன் இணைந்து இயக்குனர் வெற்றிமாறன் படங்கள் இயக்கப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தநிலையில் அது குறித்து தற்போது அவரே தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தின் ப்பி-புரொடக்ஷன் பணிகள் தொடங்கிய நிலையில் சில நாட்களுக்கு முன்பு படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், வெற்றிமாறன் அடுத்ததாக தனுஷ் மற்றும் சிம்புவை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

இதுகுறித்து இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் வடசென்னை இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் 2026 ஆம் ஆண்டில் துவங்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த படத்தின் தயாரிப்பாளரும் தனுஷ்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, தக் லைப் படத்தில் நடிகர் சிம்புவின் கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், நடிகர் சிம்பு ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 50, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR 51 படங்களை தொடந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் கதையாக உருவாக உள்ள படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகி உள்ளார்.

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், சிம்பு இருவரும் வடசென்னையை மையப்படுத்திய படத்தில் நடிக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க ‘ஜனநாயகன்’ விஜய்யின் கடைசி படமா? நடிகை மமிதா பைஜூ பதில்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com