Sunny Leone: கென்னடி திரைப்படம் தனக்கு கைகொடுக்கும் எனக் கூறியுள்ள சன்னிலியோன், என்னைப் பற்றிய அணுகுமுறையும் மாறும் எனத் தெரிவித்துள்ளார்.
Sunny Leone: கென்னடி திரைப்படம் தனக்கு கைகொடுக்கும் எனக் கூறியுள்ள சன்னிலியோன், என்னைப் பற்றிய அணுகுமுறையும் மாறும் எனத் தெரிவித்துள்ளார்.

Published on: February 14, 2026 at 9:40 pm
புதுடெல்லி, பிப்.14, 2026: அனுராக் கஷ்யப் இயக்கிய கென்னடி (Kennedy) திரைப்படத்தில் தனது கதாபாத்திரம், தன்னைக் குறித்த தொழில்துறையின் பார்வையை மாற்றி, சிறந்த வாய்ப்புகளைத் தரும் என சன்னி லியோன் நம்புகிறார். இந்த படத்தில், சன்னி ‘சார்லி’ என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். ராகுல் பட் நடித்துள்ள முன்னாள் காவலர், ஒப்பந்தக் கொலைகாரராக மாறிய ‘உதய் ஷெட்டி’யின் வாழ்க்கையில் சார்லி சிக்கிக் கொள்கிறார். சார்லி மர்மமானவள், மென்மையானவள், அதேசமயம் வலிமையானவள் என்றும் சன்னி விவரித்தார்.
இது குறித்துப் பேசிய சன்னி லியோன், “அவர் (காஷ்யப்) அவர் என்னை அழைத்து, ‘ஒரு பாத்திரம் இருக்கிறது, ஆடிஷனுக்கு வருவீர்களா?’ என்று கேட்பார் என்று நான் நினைக்கவில்லை. அந்த வாய்ப்பு கிடைத்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தொலைபேசியை வைத்தவுடன் பயமும் பதட்டமும் ஏற்பட்டது.
நான் அவருடன் வேலை செய்வது ஒரு கனவு போல இருந்தது. இன்னும் அது கனவாகவே உள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், நம்ப முடியாத நிலையில் இருந்தேன். செட்டில் அடியெடுத்து வைக்கும் வரை, நான் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நம்பவில்லை” என்றார். மேலும், இந்தப் படம் தன்னைப் பற்றிய அணுகுமுறையை மாற்றும் என்றும் சன்னி லியோன் கூறினார்.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் பாடல் காப்பியா? சிக்கலில் ஏ.ஆர். ரஹ்மான்.. ரூ.2 கோடி டெபாசிட் செய்ய உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com