Vijays Jana Nayagan Speculation: நடிகர் விஜயின் கடைசிப் படமாக கருதப்படும் ஜனநாயகன் பிப்ரவரி 20ஆம் தேதி திரைக்கு வரலாம் என யூகங்கள் வெளியாகியுள்ளன.
Vijays Jana Nayagan Speculation: நடிகர் விஜயின் கடைசிப் படமாக கருதப்படும் ஜனநாயகன் பிப்ரவரி 20ஆம் தேதி திரைக்கு வரலாம் என யூகங்கள் வெளியாகியுள்ளன.

Published on: February 7, 2026 at 2:19 pm
சென்னை, பிப்.7, 2026: விஜய் நடிப்பில் ‘ஜன நாயகன்’ படம் பிப்ரவரி 20 வெளியீடு குறித்து ஊகங்கள் வெளியாகியுள்ளன. முதலில், இத்திரைப்படம் ஜனவரி 9 வெளியீடு என திட்டமிடப்பட்டது. எனினும், சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தை அணுக மறுத்ததால், தற்போது பிப்ரவரி 20 வெளியீடு குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன. இதனால், ரசிகர்கள் மத்தியில் ஜன நாயகன் வெளியீட்டு தேதி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முன்னதாக, கே.வி.என் புரொடக்ஷன்ஸ் படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு பரிந்துரைக்க ஒப்புக்கொண்டதாக வதந்திகள் வந்தன. இதுதொடர்பாக சி.பி.எஃப்.சி சென்னை பிராந்திய அதிகாரி டி. பாலமுரளி தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “இந்த விஷயம் குறித்து எதுவும் கூற தனக்கு சட்டப்பூர்வமாக அனுமதி இல்லை” என்றார்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் சாதாரண மனிதர் அல்ல.. கூலி சிறந்த படமா? சௌந்தர்யா வெளிப்படை பேட்டி!
தொடர்ந்து பேசிய அவர், “”எனக்கு எந்த தகவலும் இல்லை. என்னிடம் இருந்தாலும், இந்த கட்டத்தில் அதை நான் வெளியிட முடியாது. எங்கள் அனைத்து தேர்வு செயல்முறைகளும் ரகசியமானது. சான்றிதழ் வழங்கப்படும் வரை நாங்கள் எதையும் வெளியிட முடியாது.
சட்டம் அத்தகைய தகவல்களைப் பகிர்வதைத் தடை செய்கிறது. படம் சான்றளிக்கப்பட்ட பின்னரே பொதுமக்கள் அறிந்து கொள்வார்கள். அந்த நேரத்தில், நாங்கள் எங்கள் போர்டல் மூலம் தொடர்பு கொள்வோம்” என்றார். இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஜனநாயகன் படம் தொடர்பாக புதிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கார்.. மலையாள நடிகர் மணியன்பிள்ளை கைது
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com