சோனம் கபூர் வீட்டில் குவா குவா சப்தம்.. இரண்டாவது வாரிசு வந்தாச்சு!

Sonam Kapoor Welcomes Baby Boy: நடிகை சோனம் கபூர்- ஆனந்த் அகுஜா தம்பதி தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்றுள்ளனர்.

Published on: March 30, 2026 at 12:35 pm

மும்பை, மார்ச் 30, 2026: பாலிவுட் நடிகை சோனம் கபூர் ஞாயிற்றுக்கிழமை தனது இரண்டாவது ஆண் குழந்தையின் வருகையை கணவர் ஆனந்த் அகுஜாவுடன் அறிவித்தார்.

நடிகை சோனம் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு பகிர்ந்துக் கொண்டார். அதில், “மிகுந்த நன்றியுடனும் அன்பால் நிரம்பிய இதயங்களுடனும், இன்று மார்ச் 29, 2026 அன்று எங்கள் ஆண் குழந்தையின் வருகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் குடும்பம் பெரிதாகியுள்ளது, அவரது வருகையால் எங்கள் இதயங்கள் மகிழ்கின்றன” எனத் தெரிவித்து இருந்தார்.

பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து

இந்நிலையில், கரீனா கபூர் கான், வாணி கபூர், தியா மிர்சா, ரியா கபூர், ஹூமா குரேஷி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கருத்துப் பகுதியில் தம்பதியருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். கரீனா கபூர், ‘வாழ்த்துக்கள் சோனா மற்றும் ஆனந்த்,’ என்று எழுதி, சிவப்பு இதயம் எமோஜிகளையும் இணைத்து இருந்தார்.

இதையும் படிங்க: ‘இன்றைக்கு எல்லாமே Propaganda தான்’.. துரந்தர் படத்தை விமர்சித்த வெற்றி மாறன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com