ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான்.. தீயாய் பரவும் புகைப்படம்!

Jailer 2 : ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: March 5, 2026 at 5:43 pm

சென்னை, மார்ச் 5, 2026: நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்தப் படத்தில், ஷாருக் கான், மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோரின் சிறப்பு தோற்றங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023-இல் வெளியான ஜெயிலர் திரைபடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில், ரஜினி காந்தின் முத்துவேல் பாண்டியன் ஐ.பி.எஸ் என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.
இந்தப் படத்தில், ரஜினிகாந்தின் முத்துவேல் பாண்டியன் ஐ.பி.எஸ் என்ற கதாபாத்திரத்தின் நண்பர் மத்தேயுவாக சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் நடித்திருந்தார்.
இவர் ஜெயிலர்-2ஆம் படத்திலும் மீண்டும் வருகிறார். இந்நிலையில், ஜிஷாத் ஷம்சுதீன் என்பவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி-யில், ஜெயிலர் குழுவுடன் சாம்பல் நிற முடி கொண்ட ஷாருக் கான் காரை ஓட்டுகிறார்.

அருகில் மோகன்லால் அமர்ந்திருக்கிறார். இவர்களுக்கு பின்னால் ரஜினிகாந்த் மற்றும் சிவராஜ்குமார் அமர்ந்திருக்கும் ஏ.ஐ உருவாக்கிய படத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த படத்தின் விளக்கத்தில், ரசிகர்கள் ஜெயிலர் 2 படத்தில் இப்படியான காட்சியை எதிர்பார்க்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்தப் பதிவை மீண்டும் பகிர்ந்த ஜிஷாத், “கண்டிப்பா இருக்கும்” என்று எழுதியுள்ளார். இது, ஷாருக் கானின் கேமியோவை மட்டுமல்லாமல், ஜெயிலர் 2 படத்தில் அவர்கள் அனைவரும் சேர்ந்து வரும் காட்சி இருக்கும் என்பதையும் உறுதிப்படுத்துவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உடலுக்கு வெளியே ஓடும் இதயம்.. கர்ப்ப காலத்தில்.. மனம் திறந்த பிரியங்கா சோப்ரா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com