Dhanush and mrunal thakur: நடிகை ம்ருணால் தாகூர் மீது நடிகர் தனுஷ் காதலில் விழுந்துள்ளதாக செய்திகள் மீண்டும் வெளியான வண்ணம் உள்ளன.
Dhanush and mrunal thakur: நடிகை ம்ருணால் தாகூர் மீது நடிகர் தனுஷ் காதலில் விழுந்துள்ளதாக செய்திகள் மீண்டும் வெளியான வண்ணம் உள்ளன.

Published on: January 19, 2026 at 6:24 pm
புதுடெல்லி, ஜன.19, 2026: கோலிவுட், பாலிவுட் என இந்திய பொழுதுபோக்கு உலகில் தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக இருப்பது இட்லிக்கடை புகழ் நடிகர் தனுஷின் இரண்டாவது திருமணம் பற்றிய செய்திதான்.
தனுஷ், 18 ஆண்டுகள் நீண்ட தம்பதிய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, 2022 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் பிரிவை அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது, இந்த அதிர்ச்சியையும் தாண்டி, அடுத்த அதிர்ச்சி அவரது ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. அதாவது தனுஷ் தனது வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குகிறார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: படமே இன்னமும் வரலயே பா.. புக் மை ஷோவில் சாதனை படைத்த ஜனநாயகன்!
தென்னிந்திய நட்சத்திரமான தனுஷ், பாலிவுட் நடிகை ம்ருனால் தாக்கூர் மீது காதலில் விழுந்துள்ளார் என்றும், விரைவில் இருவரும் திருமண பந்தத்தில் இணைவார்கள் என்ற வதந்திகள் பரவி வருகின்றன.
2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் 2022 ஜனவரியில் அவர்கள் பிரிவை அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவாகரத்துக்கு தலைவர் ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்தாலும், அவரது முயற்சியால் மகளின் குடும்ப வாழ்க்கை நீடிக்கவில்லை.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், தனுஷ் மற்றும் ம்ருனால் தாக்கூர் இடையேயான காதல் வதந்திகள் பரவத் தொடங்கின. Son of Sardaar 2 படத்தின் ஸ்கிரீனிங்கில் இருவரின் நெருக்கம் கவனத்தை ஈர்த்தது. எனினும், இதுவரை தனுஷ் அல்லது ம்ருனால் இருவரும் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை.
இதற்கிடையில், ஆனால், Free Press Journal வெளியிட்ட ஒரு செய்தி படி, தனுஷ் மற்றும் ம்ருனால் தாக்கூர் வரும் மாதம் பிப்ரவரி 14ஆம் தேதி (காதலர் தினம்) திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் செய்திகள் மீண்டும் பரவிவருவது தனுஷ் மற்றும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நல்ல பெண்கள் வரலாறு படைப்பதில்லை.. பிரியங்கா சோப்ரா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com