சிக்கென மாறிய ரித்திகா சிங்; உடல் எடையை குறைத்தது எப்படி?

Actress Ritika Singh: நடிகை ரித்திஷா சிங் தனது உடல் எடையை குறைத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Published on: May 11, 2025 at 11:06 am

சென்னை, மே 11 2025: இறுதி சுற்று மற்றும வேட்டையன் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையான ரித்திகா சிங், தனது உடல் எடையை விறுவிறுவென குறைத்துள்ளார். அவரது முழங்காலில் காயங்கள் இருந்த போதிலும் அவர் தனது உடல் எடையை வேகமாக குறைத்துள்ளார். இது தொடர்பாக வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து நடிகை ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராமில், “கடந்த மூன்று மாதங்கள் எனக்கு மிகவும் மறக்கமுடியாதவை. எடையை பொறுத்தவரை நான் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து காணப்பட்டேன். இதற்கு என் முழங்கால் காயங்கள் மோசமடைந்ததும்தான் காரணம். வலி பயங்கரமாக இருந்தது. என்னால் அசையவோ, உதைக்கவோ, ஆடவோ முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பிப்ரவரி முதல் தாம் உடற்பயிற்சியை தொடங்கினேன் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகை ரித்திகா சிங் மேலும், “இதுவரை இல்லாத அளவுக்கு அழகாக இருக்க வேண்டிய நேரம் இது. இங்கு நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக உணவு கட்டுப்பாடு தேவைப்படுகிறது. இது தேவையில்லாத கெட்டப் பழக்கங்களை கட்டுக்குள் வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சமந்தா கண்களில் வடியும் நீர்; மன அழுத்தம் காரணமா? அவரே கொடுத்த விளக்கம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com