ரேணிகுண்டா-2 போஸ்டர் வெளியீடு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Renigunta 2: ரேணிகுண்டா-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Published on: June 6, 2026 at 6:42 pm

சென்னை, ஜூன் 6, 2026: ரேணிகுண்டா-2 திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ரேணிகுண்டா’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்தப் படம், அதேபோன்ற தீவிரமான கதை சொல்லும் பாணியுடன் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.

படக்குழுவினர், இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர், படத்தை விரைவில் முடித்து வெளியிடும் நோக்கில் பணியாற்றி வருகின்றனர். ‘ரேணிகுண்டா2’ திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி, தமிழ் சினிமாவில் புதிய அலைச்சலை உருவாக்கும் படைப்பாகக் கருதப்படுகிறது. போஸ்டர் வெளியீடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

ரேணிகுண்டா படத்தை பொறுத்தமட்டில், முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் தான் இப்படத்தையும் எழுதி, தயாரித்து இயக்குகிறார். இப்படத்தில் மறைந்த நடிகர் ஷம்மி திலகன் அவர்களின் மகனும், மலையாள நடிகருமான அபிமன்யு திலகன் கதாநாயகன் ஆக அறிமுகம் ஆகிறார். இப்படத்திற்கு மனு ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். யுகபாரதி மற்றும் விவேகா பாடல்களை எழுதியுள்ளார்கள்.

இதையும் படிங்க : கிளாப் அடித்த நாகர்ஜுனா.. தயாரிப்பாளர் ஆக மாறிய நாக சைதன்யா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com