Rajini Murugan movie Re-release: பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் ரஜினி முருகன்.
Rajini Murugan movie Re-release: பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் ரஜினி முருகன்.
Published on: March 9, 2025 at 9:06 am
Updated on: March 9, 2025 at 1:33 pm
பிரபல தனியார் தொலைக்காட்சியில் அறிமுகமாகி சினிமாவில் மிகப்பெரிய உயரம் தொட்ட நடிகராக வளர்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். 15 ஆண்டுகளுக்கு முன்பு அந்த தொலைக்காட்சியில் சிவகார்த்திகேயன் தொகுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்துள்ளார்.
இவருக்கு 2013ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. பொன்ராம் இயக்கியிருந்த இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் சிவனாண்டியாக வாழ்ந்திருப்பார்.
சத்யராஜ் மகளாக வரும் திவ்யாவை சிவகார்த்திகேயன் காதலிக்கும் காட்சிகள் ரசனையானவை.
மறுபுறம் நகைச்சுவை நடிகர் சூரியின் காமெடி வேற லெவலில் இருக்கும்.
சிவகார்த்திகேயன் சூரி தோன்றும் காட்சிகள் மிகமிக ரசனையாக உருவாக்கப்பட்டிருக்கும்.
இந்தக் கூட்டணி 2016 ஆம் ஆண்டில் ரஜினி முருகன் படத்தில் மீண்டும் இணைந்தது. இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் சூரி தோன்றும் நகைச்சுவை காட்சிகள் ரசனையானவை. இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார். படத்தில் உன் மேல ஒரு கண்ணு நீ தான் என் முறை பொண்ணு என அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன.
இந்தப் படம் நகைச்சுவை நையாண்டியாக எடுக்கப்பட்டிருந்தாலும் செண்டிமெண்ட் காட்சிகளுக்கும் குறைவு இருக்காது. தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ராஜ்கிரண் அழகாக செதுக்கியிருப்பார்.
வில்லன் கதாபாத்திரம் ஏற்றிருந்த சமுத்திரக்கனி தன் பங்குக்கு ஒரு கலக்கு கலக்கி இருப்பார். படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
Will see you in theatres #Rajnimurugan
— Thirrupathi Brothers (@ThirrupathiBros) March 8, 2025
From 14th March pic.twitter.com/lcxLrAR2G0
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் திரைப்படம் 2025 மார்ச் மாதம் 14ஆம் தேதி மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனை பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சூரி ஆகியோர் இணைந்து சீம ராஜா என்ற படத்தில் நடித்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தில் மிகப்பெரிய வெற்றியை ருசித்தார். தற்போது அவர் பராசக்தி மற்றும் மதராசி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த காலங்களில் நகைச்சுவை நடிகராக தோன்றிய சூரி தற்போது கதையின் பாத்திரமாக மாறி, நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் விடுதலை பாகம் ஒன்று மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து அவர் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சர்தார் படப்பிடிப்பு.. நடிகர் காயம்.. பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com