Kandukonden Kandukonden: நடிகர் அஜித்குமாரின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தை ரி ரிலீஸ் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தானு தெரிவித்துள்ளார்.
Kandukonden Kandukonden: நடிகர் அஜித்குமாரின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தை ரி ரிலீஸ் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தானு தெரிவித்துள்ளார்.
Published on: April 26, 2025 at 10:01 pm
சென்னை ஏப்ரல் 26 2025: நடிகர் அஜித்குமார், மம்முட்டி, அப்பாஸ், நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் தபு நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.
ராஜு மேனன் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. குடும்ப பாங்கான திரைக்கதை, காதல் என இந்தத் திரைப்படம் நீளும்.
இந்தத் திரைப்படத்தை பொருத்தமட்டில் ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டதாக ரசிகர்கள் இன்றளவும் சிலாகித்து சமூக வலைதளங்களில் எழுதுவதை நாம் பார்க்க முடிகிறது. இந்தப் படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன. ஏ ஆர் ரகுமான் இசையில் என்ன சொல்லப் போகிறாய் என்ற பாடல் இன்றளவும் பலருக்கு காலர் டியூனாக இருக்கிறது.
இந்த நிலையில் இப்படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக தயாரிப்பாளர் தானு அதிரடியாக அறிவித்துள்ளார். நடிகர் விஜயின் சச்சின் திரைப்படத்தை ரிலீஸ் செய்த அவர், தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து 2026 ஆம் ஆண்டுகளில் தெறி மற்றும் கபாலி ஆகிய படங்களை ரீலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ள தானு, சூர்யாவின் காக்க காக்க திரைப்படத்தையும் ரீ ரிலீஸ் செய்வேன் என தெரிவித்துள்ளார். இதை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க; கேமராவுக்கு பின்னால் நடிகர்கள் எப்படி எல்லாம் மாறுவார்கள்.. நடிகை மாளவிகா மோகனன் ஓபன் டாக்..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com