Actor Yogi Babu: ₹7 லட்சம் போய் சேரவில்லை; அதனால் சினிமா பட விழாவுக்கு நடிகர் யோகி பாபு வரவில்லை என தயாரிப்பாளர் ராஜா விமர்சித்தார்.
Actor Yogi Babu: ₹7 லட்சம் போய் சேரவில்லை; அதனால் சினிமா பட விழாவுக்கு நடிகர் யோகி பாபு வரவில்லை என தயாரிப்பாளர் ராஜா விமர்சித்தார்.
Published on: May 5, 2025 at 5:08 pm
சென்னை மே 2025: சென்னையில் நடந்த படவிழா ஒன்றில் நடிகர் யோகி பாபுவை தயாரிப்பாளர் ராஜா விமர்சித்தார். யோகி பாபு நடிப்பில் கஜானா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபதீஷ் சாம்ஸ் தயாரித்து இயக்கி உள்ளார். படத்தில் வேதிகா, சாந்தினி ஆகியோர் நடித்துள்ளனர்.
சென்னையில் நடந்த இந்த பட விழாவில் யோகி பாபு கலந்து கொள்ளவில்லை. இது தயாரிப்பாளர் ராஜாவுக்கு ஆத்திரத்தை கொடுத்தது. இந்த நிலையில் விழாவில் பேசிய அவர், ” ஒவ்வொரு படமும் ஒரு குழந்தை மாதிரி அந்த குழந்தையை பார்க்க கூட வரவில்லை என்றால் அவர் ஒரு நடிகராக இருப்பதற்கு தகுதி இல்லாதவர். யோகி பாபு பட விழாவில் கலந்து கொள்ளாததை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்றார். மேலும், “ரூபாய் 7 லட்சம் சரியாக போய் சேர்ந்திருந்தால் யோகி பாபு பட விழாவிற்கு வந்திருப்பார்” என்றார்.
இது பட விழாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், படத்தின் இயக்குனர் பிரபதீஷ் சாம்ஸ், ” யோகி பாபு குறித்து சர்ச்சையான கருத்துக்களை அவர் பேசி விட்டார். அது அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். தயாரிப்பாளர் ராஜா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். யோகி பாபு படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்” என்றார்.
இதையும் படிங்க: 2400 ஆண்டுகள் ஆட்சி; பாடத்திட்டத்தில் சோழர்களின் வரலாறு எங்கே? நடிகர் மாதவன் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com