Actress Vinci Aloysius: படப்பிடிப்பில் நடந்த தவறான நடத்தை தொடர்பாக நடிகை வின்சி அலோஷியஸ், சக நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது புகார் அளித்துள்ளார்.
Actress Vinci Aloysius: படப்பிடிப்பில் நடந்த தவறான நடத்தை தொடர்பாக நடிகை வின்சி அலோஷியஸ், சக நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது புகார் அளித்துள்ளார்.
Published on: April 17, 2025 at 6:44 pm
கொச்சி, ஏப்.17 2025: பிரபல மலையாள நடிகை வின்சி அலோசியஸ், சக நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் எனத் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரை திரைப்பட துறையிலும் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், ‘சூத்ரவாக்கியம்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் குடிபோதையில் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இந்தப் புகார் கேரள திரைப்பட வர்த்தக சபையிலும், மலையாளத் திரைப்படத் துறையின் உள் புகார் குழுவிலும் பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Kochi, Kerala: Malayalam film actress Vincy Aloysius has filed a complaint with Film Chamber, against actor Shine Tom Chacko after he allegedly misbehaved on the set while under the influence of alcohol. Vincy filed the complaint with the Film Chamber and the film industry's…
— ANI (@ANI) April 17, 2025
‘ரேகா’, ‘விக்ருதி’ மற்றும் ‘ஜன கண மன’ போன்ற படங்களில் நடிகை வின்சி அலோசியஸ் நடித்துள்ளார். முன்னதாக, தனது அசௌகரியத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டும் அவர் வெளிப்படுத்தி இருந்தார். அதில், “சூத்ரவாக்கியம்’ படப்பிடிப்பில் நடிகரின் நடத்தை பொருத்தமற்றது; அது, தொழில்சார்ந்ததல்ல” எனத் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையில், போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அவர் முன்பு கூறிய கருத்துகள் இணையத்தில் வைரலாகின. மேலும், இது கலவையான எதிர்வினைகளைப் பெற்றன. இதையடுத்து நடிகை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
வீடியோவில், போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுடன் பணிபுரிவதைத் தவிர்ப்பதற்கான தனது முடிவு, சக நடிகருடனான விரும்பத்தகாத அனுபவத்திலிருந்து உருவானது என்று அவர் விளக்கினார்.
இதையும் படிங்க : அஜித் குமாருடன் கார் பயணம்.. மிஸ் செய்கிறேன் என்கிறார் பிரியா வாரியர்..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com