பாகிஸ்தான் பாடகி இன்ஸ்டாகிராம் முடக்கம்; என்ன காரணம்?

Pakistani singer Abida Parveen: இந்தியா- பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் பாடகி அபிதா பர்வீனின் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

Published on: May 5, 2025 at 11:19 am

புதுடெல்லி, மே 5 2025: பாகிஸ்தான் சினிமா நட்சத்திரங்கள் மஹிரா கான், ஹனியா ஆமிர் மற்றும் அலி ஜாபர் உள்ளிடடோரின் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாகிஸ்தான் பாடகி அபிதா பர்வீனின் இன்ஸ்டாகிராம் கணக்கும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாடகி அபிதா பர்வீன் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியாவில் எனது இன்ஸ்டாகிராம் கணக்கு கிடைக்கவில்லை. இந்த உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றியதால் இது நடந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் நடந்த துயரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, உள்துறை அமைச்சகத்தின் (MHA) பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முன்னதாக, 2016 ஆம் ஆண்டு உரியில் உள்ள இந்திய ராணுவத் தளத்தை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து, எந்த பாகிஸ்தான் நடிகர்களும் இந்தியத் திரைப்படத் துறையில் பணியாற்றவில்லை என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : நான் யாரையும் விமர்சிக்கவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்.. பாகிஸ்தான் நடிகை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com