Mr Bhaarath: நிரஞ்சன் இயக்கத்தில், பாரத் நாயகனாக நடித்துள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Mr Bhaarath: நிரஞ்சன் இயக்கத்தில், பாரத் நாயகனாக நடித்துள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Published on: July 18, 2026 at 3:20 pm
சென்னை, ஜூலை 18 2026: இயக்குநர் நிரஞ்சன் இயக்கத்தில், யூடியூப் படைப்பாளரும் நடிகருமான பாரத் கதாநாயகனாக நடித்துள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான பஸ்ஸின் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. கலகலப்பான ஒரு பயணம் தொடங்க தயாராகுங்கள்” என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
முன்னதாக இந்தப் படத்தை ஜூலை 24-ஆம் தேதி வெளியிட தயாரிப்பாளர்கள் ஆலோசித்து வந்தனர். பின்னர் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் வெளியீடு அக்டோபர் 1-க்கு மாற்றப்பட்டுள்ளது.
யூடியூப் உலகில் பிரபலமான பாரத் மற்றும் நிரஞ்சன் ஆகியோரின் முதல் முழுநீள திரைப்படமாக உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’, எளிமையான இளைஞரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ரொமான்டிக்-காமெடி (Rom-Com) படமாக உருவாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கும் இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் சார்பில் சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி தயாரித்துள்ளனர். சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர்ராஜன், லிங்கா, ஆதித்ய கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒம் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, பிரணவ் முனிராஜ் இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஜனநாயகன் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. எப்போது தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com