kumbh mela monalisa : கும்பமேளா புகழ் மோனலிசா கணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
kumbh mela monalisa : கும்பமேளா புகழ் மோனலிசா கணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: April 12, 2026 at 10:55 am
போபால், ஏப்.12, 2026: ‘மகா கும்பமேளா வைரல் பெண்’ என்று பரவலாக அறியப்படும் மோனாலிசா, கடந்த சில வாரங்களுக்கு முன் இஸ்லாமியர் ஒருவருடன் திருமண பந்தத்தில் இணைந்தார். இது நாடு முழுவதும் வைரல் தலைப்பு செய்தியானது. இந்நிலையில், அவர் ஒரு மாதத்திற்குப் பிறகு, மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
போக்சோ வழக்குப்பதிவு
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் காவல்துறை நடத்திய விசாரணையில் மோனலிசா ஒரு சிறுமி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரது கணவர் ஃபர்மான் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும், பாரதிய நியாய சம்ஹிதா (பி.என்.எஸ்) சட்டத்தின் கீழ் குற்றச் சதி மற்றும் சட்டவிரோதத் திருமணம் தொடர்பான பிரிவுகள் மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ மருத்துவமனைப் பதிவுகளின் அடிப்படையில், மோனலிசா 2009 டிசம்பர் 30 அன்று பிறந்தார் என்றும், இந்த ஆண்டு மார்ச் 11 அன்று நடந்த அவரது திருமணத்தின்போது அவருக்கு 16 வயது, 2 மாதம், 12 நாட்கள் ஆகியிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிருணாள் தாக்கூர் படம்.. டகோயிட் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com