Sivakarthikeyan in Instagram post: நடிகரும் ரேஸருமான அஜித் குமாரை, நடிகர் சிவகார்த்திகேயன் அபுதாபியில் சந்தித்துப் பேசினார்.
Sivakarthikeyan in Instagram post: நடிகரும் ரேஸருமான அஜித் குமாரை, நடிகர் சிவகார்த்திகேயன் அபுதாபியில் சந்தித்துப் பேசினார்.

Published on: February 9, 2026 at 2:18 pm
அபுதாபி, பிப்.9, 2026: தமிழ் நடிகர் அஜித் குமார் தற்போது அபுதாபியில் நடைபெறும் யாஸ் ஸ்பீட் ஃபெஸ்டிவல் நிகழ்வின் ஒரு பகுதியாக, யாஸ் மரினா சர்க்யூட் மைதானத்தில் நடைபெறும் ஆசியன் லெ மான்ஸ் சீரிஸ் போட்டியில் கலந்துகொண்டு வருகிறார். இந்த நிலையில் அவரை பராசக்தி திரைப்படத்தின் நட்சத்திரம் சிவகார்த்திகேயன், அபுதாபியில் சந்தித்து பேசினார். தொடர்ந்து, அந்த சிறப்பான நாளின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அதில், அஜித்தை சந்தித்து உரையாடியபோது, “அட்ரினலின் ரஷ்” (Adrenaline Rush) உணர்ந்ததாகவும், அந்த அனுபவம் மிகவும் உற்சாகமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் புகைப்படங்களை பகிர்ந்து, விளக்கமாக எழுதியுள்ளார்:
அதில், ‘தூய ஆர்வம், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, மனவலிமை – நேரில் அனுபவித்தேன், ‘அட்ரினலின் ரஷ்’ உணர்ந்தேன். ஊக்கமூட்டும் ஒருவருடன் கழித்த ஊக்கமூட்டும் நாள். எப்போதும் உங்களை மதிக்கிறேன், அன்புள்ள #AK சார் 🙏❤️” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ராணி முகர்ஜி மாறுபட்ட நடிப்பில் மர்தானி 3.. இந்திய அளவில் எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com