Kamal Hassan: கல்கி படத்தில் நடிகர் கமல்ஹாசனின் சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகி, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
Kamal Hassan: கல்கி படத்தில் நடிகர் கமல்ஹாசனின் சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகி, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

Published on: March 10, 2026 at 8:40 am
Updated on: March 9, 2026 at 11:00 pm
சென்னை, மார்ச் 10, 2026: “கல்கி 2898 AD” திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் வெறும் 20 நாள்கள் பணிக்காக ரூ.150 கோடி சம்பளம் பெற்றதாக இயக்குநரும் நடிகருமான யூகி சேது தெரிவித்துள்ளார். இதன் மூலம், இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகராக கமல்ஹாசன் உயர்ந்துள்ளார் என்று அவர் கூறினார்.
நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும் நீண்டகால திரைத்துறை சக கலைஞருமான யூகி சேது, “இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகர் கமல்ஹாசன்” என்றார்.
இது குறித்து, இந்தியாகிளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில் யூகி சேது, “ 2024ஆம் ஆண்டு நாக் அஷ்வின் இயக்கிய அறிவியல் கற்பனைத் திரைப்படமான கல்கி 2898 AD படத்தில் கமல்ஹாசன் தனது கதாபாத்திரத்திற்காக ரூ.150 கோடி பெற்றதாகக் கூறினார்.
இது குறித்து மேலும் விரிவாக பேசிய யூகி சேது, ““கமல் சார் அவர்களின் நிலைமை அப்படித்தான். கல்கி 2898 AD படத்திற்காக 20 நாட்கள் கால்ஷீட்டுக்கு அவர் ரூ.150 கோடி சம்பளம் பெறுகிறார். அவருடைய பிறந்தநாளில் நான் அவரிடம், ‘நீங்கள் இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகர்; தினமும் $1 மில்லியன் சம்பளம் பெறுகிறீர்கள்’ என்று சொன்னேன்” என்றார்.
இது, கமல்ஹாசன் தனது கலை மற்றும் புகழால் இந்திய சினிமாவில் எட்டிய புதிய உச்சத்தை வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராஷ்மிகா மந்தனாவுக்கு சிறந்த நடிகை விருது
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com