பான் மசாலா விளம்பரத்தில் சல்மான் கான்.. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

Salman Khan Gets Interim Relief : பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததாக ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக நடிகர் சல்மான் கானுக்கு நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளது.

Published on: April 9, 2026 at 5:05 pm

ஜெய்ப்பூர், ஏப். 9 2026: ராஜஸ்தான் மாநில நுகர்வோர் ஆணையத்தில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த யோகேந்திர சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘ராஜ்ஷ்ரீ பான் மசாலா’ நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்தது மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ‘குங்குமப்பூ கலந்த ஏலக்காய்’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட விளம்பரம், புற்றுநோயை ஏற்படுத்தும் பான் மசாலாவை மறைமுகமாக விளம்பரம் செய்ததாக மனுதாரர் வாதிட்டார்.

இந்த வழக்கில் ஆஜராகாததால், ஜெய்ப்பூர் மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் 4 முறை பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து சல்மான் கான் தரப்பு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், பிடிவாரண்ட்டை அமல்படுத்துவதற்கு தற்காலிக தடை விதித்து நிவாரணம் வழங்கியுள்ளது.

மேலும், தவறான விளம்பரம் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரம் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்துக்கே உள்ளதாக நடிகர் தரப்பு வாதிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம், அடுத்த கட்ட விசாரணை வரை சல்மான் கானுக்கு உடனடி சட்ட நடவடிக்கையிலிருந்து தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க : ‘ஜனநாயகன்’ குறித்த கேள்வி.. சாரி சொன்ன ரஜினிகாந்த்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com