Actor Sibiraj: மணிகண்டன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் குடும்பஸ்தன். இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது சத்யராஜ் மகன் சிபிராஜ் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Actor Sibiraj: மணிகண்டன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் குடும்பஸ்தன். இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது சத்யராஜ் மகன் சிபிராஜ் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Published on: April 18, 2025 at 1:23 pm
சென்னை ஏப்ரல் 18 2025: புரட்சித் தமிழன் நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ். இவர் தந்தை சத்யராஜ் உடன் இணைந்தும், தனியாக கதாநாயகனாகவும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் இருந்து விலகி தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், குடும்பஸ்தன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு முதன் முதலில் இவருக்கு தான் கிடைத்துள்ளது. ஆனால் அதனை சிபிராஜ் மிஸ் செய்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் சிபிராஜ் கூறுகையில், ” குடும்பஸ்தன் திரைப்படம் முதன் முதலில் நடிக்க வாய்ப்பு எனக்கு தான் வந்தது; சில காரணங்கள் காரணமாக அந்த படத்தில் நடிக்க மிஸ் ஆகிவிட்டது. இது எனக்கு வருத்தம் தான். அந்தப் படத்தில் கோவை வட்டார வழக்கில் பேசி மணிகண்டன் சிறப்பாக நடித்திருப்பார்” என தெரிவித்துள்ளார்.
சினிமாக்காரன் என்ற ப்ரொடக்ஷன் கம்பெனியின் கீழ் எஸ் வினோத்குமார் தயாரிப்பில் ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்தில் 2025 இல் வெளியான திரைப்படம் குடும்பஸ்தன். இந்தப் படத்தில் கதாநாயகனாக மணிகண்டனும் கதாநாயகியாக சாவுனே மேகனாவும் நடித்திருப்பார்கள். ₹8 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் ₹28 கோடிகள் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.
இதயும் படிங்க: எம்புரான் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு; எந்தத் தளம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com