Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் சீசன் 9 தமிழ் வின்னராக தேர்வாகியுள்ளார் திவ்யா கணேசன்.
Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் சீசன் 9 தமிழ் வின்னராக தேர்வாகியுள்ளார் திவ்யா கணேசன்.

Published on: January 21, 2026 at 2:59 pm
சென்னை, ஜன.21, 2026: நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 9 தமிழ் சீசனில் சாம்பியன் பட்டத்தை திவ்யா கணேசன் வென்றுள்ளார். இதில் இரண்டாம் இடம் சபரிநாதனுக்கும், மூன்றாம் இடம் விக்கல்ஸ் விக்ரமுக்கும், நான்காம் இடம் ஆரோரா சின்க்லேர் என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
105 நாட்கள் நீண்ட பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, ரசிகர்களுக்கு நாடகம், உணர்ச்சி, சுவாரஸ்யம் என கலவையான பொழுதுபோக்கை வழங்கி நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் திவ்யா கணேசன் வெற்றியாளராக தேர்வானார். முன்னதாக, இந்த சீசன் 2025 அக்டோபர் 5 அன்று 20 போட்டியாளர்களுடன் தொடங்கியது; பின்னர் 4 பேர் வில்ட்கார்ட என்ட்ரன்ஸ் (wildcard entrants) ஆக இணைந்தனர்.
இந்நிலையில், சீசனின் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்ட திவ்யா கணேசன், பிக்பாஸ் கோப்பை, ₹50 லட்சம் பரிசுத் தொகை, மற்றும் மாருதி சுசூகி விக்டோரியஸ் கார் பரிசாக பெற்றார்.
இதையும் படிங்க: ஜனநாயகன் வெளியீடு எப்போது? நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com