லியோ அல்ல மாஸ்டர்தான் பிடிக்கும்; லோகேஷ் கனகராஜ் பதில்

Director Lokesh Kanagaraj: எனக்கு பிடித்த படம் மாஸ்டர்தான்; மாஸ்டர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஆசை என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Published on: May 12, 2025 at 11:08 am

சென்னை, மே 11 2025: மாஸ்டர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விரும்புகிறேன் என தனது விருப்பத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் இளைய தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் மற்றும் லியோ என்ற இரு வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய இந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றன. நடிகர் விஜய்க்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ஹிட் படத்தில் இணைந்தன.

இந்த நிலையில், பெரும்பாலும் விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியே வரும் என சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்புவார்கள். இது தொடர்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் சமீபத்திய, நேர்காணல் ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ” தனிப்பட்ட முறையில் தமக்கு மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய அளவில் பிடிக்கும் என்றும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் மாஸ்டர் இரண்டாம் பாகத்திற்கான கதை நடிகர் விஜய் அண்ணாவுக்கும் தெரியும் என தெரிவித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், “லியோவும் சிறப்பான திரைப்படம் தான்” என்றார்.

இதையும் படிங்க சமந்தா-ராஜ் ரிலேஷன்ஷிப் உண்மையா? திடீர் வைரலான புகைப்படம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com