Dhurandhar-2 Box-office Collection: துரந்தர்-2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.
Dhurandhar-2 Box-office Collection: துரந்தர்-2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

Published on: April 1, 2026 at 1:10 pm
மும்பை, ஏப்.1, 2026: ரன்வீர் சிங் நடித்த துரந்தர் 2 திரைப்படம், பாலிவுட்டில் முதல் முறையாக ₹1400 கோடி வசூலை கடந்துள்ளது.
துரந்தர் 2 உலகளாவிய வசூல் – 13வது நாள்
துரந்தர்: தி ரிவெஞ்ச் இன்னும் பல வலுவான சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில், திரையரங்குகளில் 13வது நாளான செவ்வாய்க்கிழமை, இந்த படம் உள்நாட்டு வசூலில் உயர்வைக் கண்டது. வெளிநாடுகளிலும் நல்ல நிலைப்பாட்டைத் தக்க வைத்ததால், உலகளாவிய அளவில் ₹1400 கோடி வசூலை கடந்துள்ளது.
சீன சந்தையைத் தவிர்த்து, பாலிவுட் திரைப்படங்களில் இதுவே முதல் முறையாக இப்படியொரு சாதனை நிகழ்ந்துள்ளது.
முன்னதாக, ஆதித்யா தரின் ஸ்பை த்ரில்லர் திரைப்படமான துரந்தர் 2 உலகளாவிய வசூலில் முதல் வாரத்திலேயே ₹1000 கோடி மைல்கல்லை கடந்தது. இந்த நிலையில், முதல் வார இறுதியில் ₹100+ கோடி நிகர வசூலைப் பதிவு செய்து, அனைத்து பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் முறியடித்தது.
இரண்டாம் வார இறுதியில் உள்நாட்டில் ₹170 கோடி நிகர வசூல் கண்டது. இது, இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத உயர்ந்த வசூல் ஆகும்.
வெளிநாட்டு வசூல்:
முதல் வார இறுதியில் $22 மில்லியன் வசூல் செய்தது. இதுவே, ஆரம்பத்தில் $7 மில்லியன் என்ற வலுவான தொடக்க வசூலை கண்டது.
இதற்கிடையில், வட அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாட்டு சந்தைகளில், பாகுபலி 2 படத்தின் 9 ஆண்டுகள் பழைய சாதனையை முறியடித்து, இந்தியாவின் மிக அதிக வசூல் பெற்ற படமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராம் சரண் பிறந்த நாள்.. ரசிகர்களுக்கு இரடிப்பு மகிழ்ச்சி.. மகள் படம் வெளியீடு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com