ரீ ரிலீஸ் ஆகும் சியான் விக்ரமின் சேது.. தியேட்டரில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.!

Sethu Movie Re-release: பாலா டைரக்ஷனில் சியான் விக்ரம் நடிப்பில் உருவான சேது திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. தியேட்டரில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.

Published on: June 25, 2025 at 3:03 pm

சென்னை ஜூன் 25 2025: பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சேது. இந்தப் படத்தில் சிவக்குமார், அபிதா ஸ்ரீமன், ஜோதிலட்சுமி மோகன் வைத்யா, மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மேலும், தற்போது பிரபல இயக்குனர்களாக இருக்கும் அமீர், சசிகுமார் உள்ளிட்டோர் இந்த பாடத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார். ஷர்மதா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் கந்தசாமி தயாரித்திருந்தார்.

இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றது. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் பல்வேறு மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது. மேலும் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றது.

சேது திரைப்படம் நடிகர் விக்ரமின் திரைப் பயணத்தில் ஒரு திருப்பமாக அமைந்தது. வருகிற டிசம்பர் 10ஆம் தேதி இந்த படம் திரைக்கு வந்து 26 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு சேது படத்தை அதிநவீன தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

26 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்த பாடத்தை மீண்டும் திரையிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு விக்ரம் ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க தனுஷ் செட்டிலாக விரும்பும் நாடு எது தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com