Shilpa Shetty Wins HC Relief: நடிகை ஷில்பா ஷெட்டி தனிப்பட்ட உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான மனுவில் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Shilpa Shetty Wins HC Relief: நடிகை ஷில்பா ஷெட்டி தனிப்பட்ட உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான மனுவில் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Published on: March 10, 2026 at 4:55 pm
மும்பை, மார்ச் 10, 2026: பாலிவுட் நடிகர்- நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாப்பு வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் மும்பை நீதிமன்றத்தில் நிவாரணம் பெற்ற நடிகையாக ஷில்பா ஷெட்டி திகழ்கிறார். அதாவது, மும்பை உயர் நீதிமன்றம், நடிகையின் தனிப்பட்ட உரிமைகள் தவறாக பயன்படுத்தப்படாமல் பாதுகாக்கும் உத்தரவை வழங்கியுள்ளது.
தற்போதைய உத்தரவின்படி, நடிகை ஷில்பா ஷெட்டியின் பெயர், புகைப்படம், குரல், உருவம் அல்லது தனித்தன்மையை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்தவோ, தவறாக வெளிப்படுத்தவோ கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும், பல்வேறு தளங்களில் பரவி வரும் அவதூறு மற்றும் உரிமை மீறிய உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் பிரபலங்களின் அடையாளம் மற்றும் கண்ணியத்தை அனுமதி இல்லாமல் வணிக ரீதியாக பயன்படுத்தவோ, டிஜிட்டல் முறையில் தவறாக பயன்படுத்தவோ முடியாது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இதனை உறுதிப்படுத்திய ஷில்பாவின் வழக்கறிஞர் சனா ரயீஸ் கான், “நீதிமன்றம் அவரது தனிப்பட்ட உரிமைகளை பாதுகாத்து, அவரது பெயர், புகைப்படம், குரல் மற்றும் தனித்தன்மை ஆகியவை மதிப்புமிக்க சட்ட உரிமைகள் எனவும், அவற்றை அனுமதி இல்லாமல் வணிக ரீதியாக பயன்படுத்தவோ, டிஜிட்டல் முறையில் மாற்றவோ முடியாது எனவும் அங்கீகரித்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க: முதல் படத்திலேயே சர்வதேச அங்கீகாரம்.. சாதித்த மயிலா திரைப்படம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com