₹4 கோடிக்கு பங்களா வாங்கி ₹8 கோடிக்கு விற்ற நடிகர் அக்ஷய் குமார்.. இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..!

Bollywood actor Akshay Kumar: நடிகர் அக்ஷய் குமார் மும்பையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் வாங்கிய அலுவலக இடத்தை 65 சதவீத லாபத்துடன் விற்றுள்ளார்.

Published on: April 22, 2025 at 11:23 am

மும்பை, ஏப். 22 2025: பாலிவுட் நடிகர்அக்ஷய் குமார் மும்பையின் லோயர் பரேல் பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது அலுவலகத்திற்கான இடத்தை ரூ. 4.85 கோடிக்கு வாங்கியிருந்தார். இந்நிலையில் தனது அலுவலக இடத்தை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ரூ. 8 கோடிக்கு விற்பனை செய்து 65% லாபத்தை ஈட்டியுள்ளார்.​

இந்த அலுவலகம் ‘ஒன் பேலஸ் லோதா’ என்ற வணிக வளாகத்தில் அமைந்துள்ளது. இது 1.08 ஏக்கர் பரப்பளவில் மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

இந்த அலுவலகம் 1,146.88 சதுர அடிகள் பரப்பளவுடன் இரண்டு கார் பார்க்கிங் வசதிகளையும் கொண்டது. இந்த பரிவர்த்தனைக்கு ரூ. 48 லட்சம் முத்திரை வரி மற்றும் ரூ. 30,000 பதிவு கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது.​ அக்ஷய் குமார், இந்தியா முழுவதும் பல சொத்துகளை வாங்கியுள்ளார். இதில் கோவா மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களும் அடங்கும்.

அக்ஷய் குமாரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 2,500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர் ரூ. 80 கோடி மதிப்புள்ள கடற்கரை பங்களாவும் வைத்திருக்கிறார். இதில் ஹோம் தியேட்டர், வாக்-இன் அலமாரி மற்றும் விரிவான தோட்டம் ஆகியவை உள்ளன. 1,878 சதுர அடி பரப்பளவில், ரூ.7.8 கோடி மதிப்புள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பும் வைத்திருக்கிறார். அக்ஷய் ரூ. 5 கோடி மதிப்புள்ள போர்த்துகீசிய பாணி வில்லாவையும் வைத்திருக்கிறார்.

அக்ஷய் குமார் சமீபத்தில் ‘ஸ்கை ஃபோர்ஸ்’ மற்றும் ‘கேசரி 2’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார், இவை வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க ₹7.75 லட்சத்துக்கு நம்பர் பிளேட் வாங்கிய நடிகர் பாலகிருஷ்ணா.. திரும்பிப் பார்த்த தெலுங்கு திரை உலகம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com