Asha Bhosle On Hospital : பாடகி ஆஷா போஸ்லே சுவாச மற்றும் இதய பிரச்சினை காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Asha Bhosle On Hospital : பாடகி ஆஷா போஸ்லே சுவாச மற்றும் இதய பிரச்சினை காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Published on: April 12, 2026 at 10:48 am
மும்பை, ஏப். 12 2026: புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லே, இதயம் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் காரணமாக சனிக்கிழமை மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 92 வயதான போஸ்லே, கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றி வருகிறார். ஆஷா போஸ்லேவின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், மூத்த பாடகியின் மருத்துவமனைச் சேர்க்கை குறித்து அவரது குடும்பத்தினர் இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. அவரது உடல்நலம் மற்றும் தற்போதைய நிலை குறித்த மற்ற விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஆஷா போஸ்லே
ஆஷா போஸ்லே இந்தித் திரையுலகின் மிகவும் வெற்றிகரமான பாடகர்களில் ஒருவராக அறியப்படுகிறார். எட்டு தசாப்தங்களுக்கும் மேலான தனது திரைப்பயணத்தில், அவர் பல இந்திய மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் ஆல்பங்களுக்காகப் பாடல்களைப் பாடியுள்ளார். அவருக்கு தாதாசாகேப் பால்கே விருதும் வழங்கப்பட்டது. 2008-ல், நாட்டின் இரண்டாவது உயரிய குடிமை விருதான பத்ம விபூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மிருணாள் தாக்கூர் படம்.. டகோயிட் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com