Anurag Kashyap Apologises: பிராமணர்கள் குறித்து இழிவான கருத்துக்களை தெரிவித்த பிரபல நடிகர் அனுராக் காஷ்யப் பொது மன்னிப்பு கோரினார்.
Anurag Kashyap Apologises: பிராமணர்கள் குறித்து இழிவான கருத்துக்களை தெரிவித்த பிரபல நடிகர் அனுராக் காஷ்யப் பொது மன்னிப்பு கோரினார்.
Published on: April 19, 2025 at 1:35 pm
Updated on: April 19, 2025 at 1:39 pm
மும்பை, ஏப்.19 2025: பிராமண சமூகத்தை குறிவைத்து நடிகர் காஷ்யப் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, அனுராக் காஷ்யப் பொது மன்னிப்பு கோரியுள்ளார். சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் பூலே திரைப்படத்தைச் சுற்றி நடந்து வரும் சர்ச்சைக்கு மத்தியில் அனுராக் காஷ்யப்பிடம் இருந்து இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
இது குறித்து அனுராக் காஷ்யப் அறிக்கையில், “இது எனது மன்னிப்பு, எனது பதிவிற்காக அல்ல, சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரிக்கும், வெறுப்புக்கும்” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, “உங்கள் மகள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் சன்ஸ்காரின் ராஜாக்களிடமிருந்து பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்களைப் சந்தித்தால் எந்த நடவடிக்கையும் அல்லது பேச்சும் மதிப்புக்குரியது அல்ல.
எனவே, நான் சொல்லியதை திரும்பப் பெற முடியாது – நான் அதைத் திரும்பப் பெற மாட்டேன். ஆனால் நீங்கள் யாரையாவது துஷ்பிரயோகம் செய்ய விரும்பினால், அதை என் மீது செலுத்துங்கள். என் குடும்பத்தினர் மீது அல்ல. அவர்கள் இதுபோன்று எதுவும் சொல்லவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
அனுராக் காஷ்யப், பிராமணர்கள் முகத்தில் .. என பேசியதாக சர்ச்சைகள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மன்னிப்பு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மேற்கு வங்கத்தில் வன்முறை அதிகரிப்பு: கவர்னர் பரபரப்பு பேட்டி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com