தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து.. மீண்டும் திரையில் அமர்களம்.. தேதி தெரியுமா?

Amarkkalam Re Release : ஏப்.24ஆம் தேதி அஜித்குமார்- ஷாலினி திருமண நாளை முன்னிட்டு, அமர்களம் படம் தியேட்டரில் வெளியாகிறது.

Published on: April 13, 2026 at 1:32 pm

சென்னை, ஏப்.13, 2026: நடிகர் அஜித் குமார்- ஷாலினி அஜித் குமார் நடிப்பில் வெளியான, “அமர்க்களம்” திரைப்படம் ஏப்ரல் 24 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

சரண் இயக்கிய இப்படம் முதலில் ஆகஸ்ட் 13, 1999 அன்று வெளியானது. இதில் அஜித் குமார் வாசுவாக நடித்திருப்பார். மோகனா ஆக ஷாலினி வாழ்ந்திருப்பார். இப்படத்தில், மோகனாவுடன் மோதலில் ஈடுபடும் இளைஞனாக அஜித் வருவார். படத்தில், போலீஸ் அதிகாரியின் மகளான ஷாலினிக்கும் அஜித் குமாருக்கும் இடையே காதல் பிறக்கும். இந்நிலையில், ஜோடி ஒன்று சேர முயற்சிக்கும்போது எதிர்பாராத சவால்களை சந்திக்கும்.

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்துக்கு பின்னர் அஜித் குமார்- ஷாலினி இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர். அதாவது, இவர்கள் 2000வது ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் வருகிற 24ஆம் தேதி இவர்களின் திருமண நாளை முன்னிட்டு அமர்களம் படம் திரையில் வெளியாக உள்ளது.

மற்ற மொழிகளில் அமர்களம்

இப்படம் பின்னர் தெலுங்கில் ஆர்யன் ராஜேஷ் நடித்த லீலா மஹால் சென்டர் (2004) என்றும், கன்னடத்தில் சிவ ராஜ்குமார் மற்றும் ரகுவரன் நடித்த அசுரா (2001) என்றும் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘நடிகையாக எனது தாகம் தீரவில்லை’.. கௌதமி நாயர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com