மீண்டும் விநாயக் மகாதேவன்? உருவாகிறதா மங்காத்தா-2? கோடம்பாக்க நிலவரம் என்ன?

Mankatha 2 Reunion: அஜித் குமார், வெங்கட் பிரபு மீண்டும் ஒன்றாக மங்காத்தா 2க்காக இணைகிறார்களா?

Published on: March 29, 2026 at 9:48 pm

சென்னை, மார்ச் 29, 2026: அஜித் குமார், வெங்கட் பிரபு மங்காத்தா 2க்காக மீண்டும் இணைகிறார்கள்? இது தொடர்பான தகவல்கள் என்ன கூறுகின்றன?

இது தொடர்பாக, வலைப் பேச்சு (Valai Pechu) வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, அஜித் குமார் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளது. இந்த திட்டம் மங்காத்தா 2 எனக் கருதப்படுகிறது. முதல் படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்த கூட்டணி மீண்டும் நடக்கலாம் என பேசப்படுகிறது.

விவரங்கள் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த தொடர்ச்சிப் படம் தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களால் தயாரிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து வெங்கட் பிரபு திட்டமிட்டிருந்த படமும் தற்போது தள்ளிப் போகலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எனினும், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

2011ல் வெளியான மங்காத்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் அஜித் குமார் விநாயக் மகாதேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தக் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு, பல்வேறு நடிகர்கள் கூட சால்ட் அண்ட் பெப்பர் லுக் ஹேர் ஸ்டைலில் திரையில் தோன்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; மோகன் லாலின் தனிநபர் உரிமை பாதுகாப்பு வழக்கு.. டெல்லி ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com