42 வயதில் கவர்ச்சி நடனம் ஆட தயாரான ஸ்ரேயா.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Actress Shreya: பிரபல நடிகை ஸ்ரேயா 42 வயது கவர்ச்சி நடனம் ஆட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது போன்ற நடனத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published on: May 4, 2025 at 12:07 pm

சென்னை மே 4 2025: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி, மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக இவரின் நடிப்பில், எனக்கு 20 உனக்கு 18, மலை திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்கள் கவனம் பெற்றன. மேலும் இவர் நடிகர் விஜய் உடன் அழகிய தமிழ் மகன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஸ்ரேயாவை பொருத்தமட்டில் சினிமாவில் முன்னாடி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும் போதே 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிகை ஸ்ரேயா திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

எனினும் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தலை காட்டினார். இந்த நிலையில் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் குத்தாட்டம் போட ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


முன்னதாக நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயா பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மேலும் இரண்டு படங்களுக்கு கவர்ச்சி நடனமாட ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை ஸ்ரேயாவுக்கு தற்போது 42 வயது ஆகிறது. இதற்கிடையில், அவர் சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் போது வாங்கிய சம்பளத்தை விட கவர்ச்சி நடனமாட அதிக சம்பளம் வாங்குகிறார் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ‘பயங்கரவாதிகளுக்கு நாம் சொல்ல வேண்டியது ஒன்றுதான்’.. நடிகர் அக்ஷய் குமார்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com