Actress Rashmika Mandanna: இந்த உலகில் யாரும் நல்லவர்கள் கிடையாது; இன்று நட்பில் இருப்பவர்கள் நாளை பிரியலாம் என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
Actress Rashmika Mandanna: இந்த உலகில் யாரும் நல்லவர்கள் கிடையாது; இன்று நட்பில் இருப்பவர்கள் நாளை பிரியலாம் என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
Published on: May 5, 2025 at 6:08 pm
சென்னை மே 5 2025: இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ராஸ்மிகா மந்தனா. இவர் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. புஷ்பா படத்தின் மூலம், இந்திய அளவில் நடிகையாக உயர்ந்த ராஷ்மிகா மந்தனா, ” இந்த உலகில் யாரும் நல்லவர்கள் கிடையாது” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா, ” நீங்கள் யாரை அதிகம் நேசிக்கிறீர்களோ அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். இந்த உலகத்தில் யாரும் நல்லவர்கள் கிடையாது; அதேநேரம் யாரும் கெட்டவர்களும் கிடையாது” என்றார். மேலும் இன்று நட்புறவில் இருப்பவர்கள் நாளை பிரியலாம்; நம்முடன் இருப்பவர்கள் வாழ்க்கைத் துணையாக நம் வாழ்நாள் முழுவதும் கூடவே வரலாம். இவையெல்லாம் தேர்வு செய்யும் மனிதர்களை பொருத்தது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒவ்வொருவரும் தங்களது பெற்றோர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் எனக் கூறிய நடிகை ராஷ்மிகா, ” வாழ்க்கையை பொருத்தமட்டில் உங்களுக்கான நல்லவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்” என்றார். இதற்கிடையில் நடிகை ரஷ்மிகா மந்தனா யாரைக் குறிப்பிட்டு இவ்வாறு பேசியுள்ளார் என்ற கருத்தும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அதிக ரசிகர்களை சம்பாதிப்பேன்; சிம்புவுடன் கூட்டணி போட்ட கயாடு லோகர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com