Mrunal Thakur: பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் விவாகரத்தான வில்லன் நடிகர் ஒருவரை விரும்புவதாக கூறப்படுகிறது.
Mrunal Thakur: பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் விவாகரத்தான வில்லன் நடிகர் ஒருவரை விரும்புவதாக கூறப்படுகிறது.
Published on: May 7, 2025 at 3:01 pm
ஹைதராபாத் மே 7 2025: பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், திருமணமான வில்லன் நடிகர் ஒருவருடன் இணைந்து கிசுகிசுக்கப்படுகிறார். நடிகை மிருணாள் தாகூர் சீதாராமம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஆவார்.
இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் மிருணாள் தாகூர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டார். தொடர்ந்து இவர் பல தெலுங்கு, இந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் மிருணாள் தாகூர் காதல் குறித்து செய்திகள் பரவியுள்ளது. இவர் சீதாராமம் படத்தின் வில்லன் நடிகருடன் காதல் கொண்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது.
இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் சுமந்த். மிருணாள் தாகூர் இவரை காதலிப்பதாகவும் விரைவில் இவர்களை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. இவர் சுமந்த் துடன் இருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 2004இல் நடிகை கீர்த்தி ரெட்டியை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்கள் 2006 இல் விவாகரத்து பெற்றனர்.
இதையும் படிங்க ₹7 லட்சம் கொடுத்தால் வந்து இருப்பார்.. யோகி பாபு மீது தயாரிப்பாளர் விமர்சனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com