Simbu 49: நடிகர் சிம்புவுடன் புதிய கூட்டணி போட்ட நடிகை கயாடு லோகர், ” தான் நிறைய ரசிகர்களை சம்பாதிக்க உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
Simbu 49: நடிகர் சிம்புவுடன் புதிய கூட்டணி போட்ட நடிகை கயாடு லோகர், ” தான் நிறைய ரசிகர்களை சம்பாதிக்க உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
Published on: May 5, 2025 at 4:05 pm
சென்னை மே 5 2025: டிராகன் பட நடிகை கயாடு லோகர், சிம்புவுடன் புதிய படத்தில் ஜோடி சேருகிறார். இந்நிலையில் தாம் நிறைய ரசிகர்களை சம்பாதிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் டிராகன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் மொத்தம் மூன்று நாயகிகள் நடித்திருந்தார்கள். முதல் பாதையில் கேரளா நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்திருப்பார்.
இரண்டாம் பாதியில் தோன்றிய கயாடு லோகர் ஒட்டுமொத்த ரசிகர்களையும், தன் பக்கம் காந்தம் போல் ஈர்த்திருப்பார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் யார் இந்த நடிகை என பலரும் கேள்விகளை எழுப்பினார்கள். இந்த நிலையில், கயாடு லோகர் நடிகர் சிம்புவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
பார்க்கிங் என்ற படத்தை இயக்கி பலரின் கவனத்தையும் ஈர்த்த ராம்குமார் பாலகிருஷ்ணன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் குறித்து பேசிய நடிகை கயாடு லோகர், ” எனக்கு பிடித்த நடிகர்களில் சிம்புவும் ஒருவர்; அவருடன் நடிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் இன்னும் நிறைய ரசிகர்களை ஈர்க்கப் போகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆறு மாதம் வெயிட்டிங்.. ஜனநாயகன் பட குழுவை விமர்சித்த சனம் செட்டி..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com