Copyright Case on Uyirulla Varai Usha: உயிருள்ள வரை உஷா படத்தின் பாடல்கள் பதிப்புரிமை தொடர்பாக நடிகர் டி.ராஜேந்தர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
Copyright Case on Uyirulla Varai Usha: உயிருள்ள வரை உஷா படத்தின் பாடல்கள் பதிப்புரிமை தொடர்பாக நடிகர் டி.ராஜேந்தர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

Published on: March 30, 2026 at 8:03 pm
சென்னை, மார்ச் 30, 2026: உயிருள்ளவரை உஷா படத்தின் பாடல்கள் பதிப்புரிமை தொடர்பாக நடிகர்- இயக்குனர் என பன்முக திறமை கொண்ட டி-ராஜேந்தர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
உயிருள்ளவரை உஷா
உயிருள்ளவரை உஷா, இயக்குநர் டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற திரைப்படம் ஆகும். இதில் டி. ராஜேந்தர், நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் டி. ராஜேந்தர் ஆவார். இத்திரைப்படம் 1983 மார்ச் 4ஆம் தேதியன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. படத்தில் அடி என்னடி, வைகைக் கரை காற்றே நில்லு, இதயமதை கோவில் என்றேன், உள்ளிட்ட அனைத்து பாடல்களும் செம்ம ஹிட் அடித்தன.
நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் டி- ராஜேந்தர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், 1983ஆம் ஆண்டு வெளியான உயிருள்ளவரை உஷா படத்தின் பாடல்களை பதிப்புரிமையை மீறி வர்த்தக ரீதியாக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கை நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி விசாரித்தார். அவர், ஏ.வி.எம் மற்றும் டபிள்யூ. எல். எபிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் பதிலளிக்கும் படி உத்தரவிட்டார். இந்த வழக்கு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சோனம் கபூர் வீட்டில் குவா குவா சப்தம்.. இரண்டாவது வாரிசு வந்தாச்சு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com