கடலுக்குள் சினிமா படப்பிடிப்பு.. நடிகர் ராகுல் பானர்ஜி மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Rahul Banerjee Falls Into Sea Dies: பிரபல பெங்காலி நடிகர் ராகுல் பானர்ஜி (வயது 43), படப்பிடிப்பின் போது கடலில் விழுந்து உயிரிழந்தார். இது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published on: March 30, 2026 at 1:03 pm

புவனேஸ்வர், மார்ச் 30, 2026: படப்பிடிப்பின் போது கடலில் விழுந்த நடிகர் ராகுல் பானர்ஜி மரணம் அடைந்தார்.

பிரபல பெங்காலி நடிகர் ராகுல் பானர்ஜி, ஒடிசாவில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தார். இந்த துயரமான சம்பவம் போலே பாபா பர் கரேகா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பின் போது நடந்துள்ளது. அதாவது, தால்சாரி கடற்கரையில் நடந்த படப்பிடிப்பின்போது நடந்துள்ளது. படப்பிடிப்பின் போது அவர் கடலில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர்; இதில் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் அவரது ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் ராகுல் பானர்ஜி உடல், தற்போது ஒடிசாவின் திகா மருத்துவமனையில் உள்ளது. சம்பவம் மற்றும் அடையாளம் தொடர்பான கூடுதல் விவரங்களைத் திரட்டி வருகின்றனர். நடிகர் ராகுல் பானர்ஜி மரணத்துக்கு மேற்கு வங்க முதலமைச்சர்- திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் திரைபிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சோனம் கபூர் வீட்டில் குவா குவா சப்தம்.. இரண்டாவது வாரிசு வந்தாச்சு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com