Kuberaa film enters the rs 100 crore club: நடிகர் தனுஷின் குபேரா படம் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Kuberaa film enters the rs 100 crore club: நடிகர் தனுஷின் குபேரா படம் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Published on: June 26, 2025 at 9:54 am
சென்னை, ஜூன் 26 2025: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள குபேரா திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை சிறந்த விமர்சனங்களைப் பெற்றது.
இந்தப் படம் உலகளவில் வசூலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், குபேரா படம் வெளியான 5 நாள்களுக்குள் ரூ.100 கோடி கிளப்பில் நுழைந்துள்ளது.
அதாவது, இன்று (ஜூன் 25 2025) குபேரா படத்தின் தயாரிப்பாளர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கில் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் புதுப்பிப்பைப் பகிர்ந்து கொண்டனர்.
அதில், “செல்வம். ஞானம். இப்போது… ₹100+ கோடி பாக்ஸ் ஆபிஸில் ஒரு மகத்தான சதத்துடன் ஆட்சி செய்கிறது” எனத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் படத்தின் வசூல் என்ன?
இதற்கிடையில், இந்தியாவில் குபேரா படத்தின் சமீபத்திய வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சாக்னில்க்கின் சமீபத்திய தகவலின்படி, குபேரா இந்தியாவில் ₹ 63.69 கோடி வசூலித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுசு பரபரப்பு பேச்சு
குபேரா படத்தின் புரமோஷன் விழாவில் நடிகர் சவால் பெயரை குறிப்பிடாமல் யாரோ சிலருக்கு சவால் விட்டு பேசினார். அப்போது ஒரு செங்கலை கூட உருவ முடியாது என்றார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : தனுஷ் செட்டிலாக விரும்பும் நாடு எது தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com