Canara Banks 444 day fixed deposit: கனரா வங்கியின் ரூ.444 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் தெரியுமா?
Canara Banks 444 day fixed deposit: கனரா வங்கியின் ரூ.444 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் தெரியுமா?
Published on: May 9, 2025 at 11:02 am
சென்னை, மே 9 2025: கனரா வங்கி 444 நாள்கள் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில், ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
வட்டி விகிதம்
கனரா வங்கி 444 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் 7.25 சதவீதம் வட்டி விகிதம் பொதுக்குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. மூத்தக் குடிமக்கள் கூடுதலாக 0.50 சதவீதம் என 7.75 சதவீதம் வட்டி விகிதம் பெறுவார்கள்.
ரூ.4 லட்சம் முதிர்வு
கனரா வங்கியில், 444 திட்டத்தில் பொதுக்குடிமக்கள் ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் அவர்களுக்கு ரூ.4 லட்சத்து 36 ஆயிரம் கிடைக்கும். அதாவது வட்டியாக மட்டும் ரூ.36 ஆயிரத்து 534 கிடைக்கும்.
மூத்தக் குடிமக்கள்
இதுவே இத்திட்டத்தில் மூத்தக் குடிமக்கள் ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வின்போது ரூ.4 லட்சத்து 39 ஆயிரம் கிடைக்கும். அதாவது வட்டியாக மட்டும் ரூ.39 ஆயிரத்து 068 கிடைக்கும்.
எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட்
இதுவே எஸ்.பி.ஐ 444 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் பொதுக்குடிமக்களுக்கு வட்டியாக 35 ஆயிரத்து 492 வட்டியாக கிடைக்கும்.
அதுவும் மூத்தக் குடிமக்கள் என்றால் ரூ.38 ஆயிரத்து 101 வட்டியாக கிடைக்கும். எஸ்.பி.ஐ 444 நாள்கள் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் மூத்தக் குடிமக்களுக்கு 7.55 சதவீத வட்டியும், பொதுக்குடிமக்களுக்கு 7.05 சதவீத வட்டியும் வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: (இந்தச் செய்தி தகவலுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. முதலீடுக்கு முன் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் முதலீடு குறித்து முழுவதுமாக கேட்டு தெரிந்துக்கொள்ளவும். முதலீட்டாளரின் லாப நஷ்டங்களுக்கு திராவிடன் டைம்ஸ் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது)
இதையும் படிங்க : 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்: 24 வங்கிகளின் வட்டி விகிதம்.. எதில் பெஸ்ட் ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com