₹73க்கு முதலீடு ஆரம்பம்.. இந்த வார ஐபிஓ புதிய வரவு.. முழு பட்டியல்!

Upcoming IPOs for this week; அண்மைக்காலமாக முதலீட்டாளர்கள் பங்கு தொடர்பான சந்தைகளில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்; இந்த வாரம், சந்தையில் புதிதாக வரவுள்ள பங்குகள் குறித்து பார்க்கலாம்.

Published on: January 24, 2026 at 2:45 pm

Updated on: January 24, 2026 at 2:47 pm

சென்னை ஜனவரி 24, 2026; ஜனவரி மாதத்தின் இறுதி வாரத்தில் பெரிய IPO வெளியீடு எதுவும் இல்லை; சுருங்கச் சொல்வதென்றால், ஜனவரி 26 முதல் 30 வரை புதிய Mainboard IPOக்கள் இல்லை. அதே நேரத்தில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பங்கு வெளியீடு உள்ளது; அதாவது, புதிய IPOக்கள் சந்தாதாரர்களுக்காக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

கஸ்தூரி மெட்டல் காம்போசிட் IPO

கஸ்தூரி மெட்டல் காம்போசிட் நிறுவனம் தனது IPOவை ஜனவரி 27 அன்று திறக்க உள்ளது. இந்த IPO ஜனவரி 29 அன்று நிறைவடைகிறது. அதன்படி இந்த நிறுவனம் முழுமையாக புதிய பங்குகள் வெளியீட்டின் மூலம் ரூ.17.61 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

பங்கு விலை: ₹61 – ₹64 வரம்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பங்குகள் பிப்ரவரி 3 அன்று பட்டியலிடப்பட உள்ளன.

  • NFP சம்பூர்ணா ஃபூட்ஸ் IPO
  • NFP சம்பூர்ணா ஃபூட்ஸ் நிறுவனம் தனது IPOவை ஜனவரி 27 அன்று திறக்க உள்ளது.
  • இந்த IPO ஜனவரி 29 அன்று நிறைவடைகிறது.
  • பிப்ரவரி 3ஆம் தேதி இந்நிறுவனம் பட்டியலிடப்பட உள்ள நிலையில், பங்கு விலை: ₹52 – ₹55 வரம்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கனிஷ்க் அலுமினியம் IPO

கனிஷ்க் அலுமினியம் இந்தியா நிறுவனம் தனது IPOவை ஜனவரி 28 அன்று திறக்க உள்ளது. இதன், சந்தா காலம் ஜனவரி 28 – ஜனவரி 30 ஆகும். ஒரு பங்கின் விலை ₹73 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எம்-சேஃப் இக்விப்மென்ட்ஸ் IPO

எம்-சேஃப் இக்விப்மென்ட்ஸ் நிறுவனம் தனது IPOவை ஜனவரி 28 அன்று திறக்க உள்ளது. ஒரு பங்கின் விலை, ₹116 – ₹123 என்ன நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன், சந்தா காலம் ஜனவரி 28 – ஜனவரி 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அக்கிரீஷன் நியூட்ராவேடா

அக்கிரீஷன் நியூட்ராவேடா நிறுவனம் தனது IPOவை ஜனவரி 28 அன்று திறக்க உள்ளது. இதன், IPO அளவு: ₹24.77 கோடி ஆகவும் ஒரு பங்கின் விலை ₹122 – ₹129 ஆகவும் காணப்படுகிறது.

CKK ரீட்டெயில் மார்ட்

CKK ரீட்டெயில் மார்ட் நிறுவனம் வாரத்தின் கடைசி SME IPOவாக ஜனவரி 30 அன்று திறக்கிறது. இதன், IPO சந்தா காலம் ஜனவரி 30 – பிப்ரவரி 3 ஆகவும்; பங்கு விலை ₹155 – ₹163 ஆகவும் காணப்படுகிறது.

இதையும் படிங்க; ₹1,130 கோடி.. மில்கி மிஸ்ட்- மகாராஷ்டிராவுடன் ஒப்பந்தம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com