Fixed Deposit: 1 முதல் ஐந்து ஆண்டு கால பிக்சட் டெபாசிட் முதலீடுக்கு எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டர்ன் என்பது குறித்து பார்க்கலாம்.
Fixed Deposit: 1 முதல் ஐந்து ஆண்டு கால பிக்சட் டெபாசிட் முதலீடுக்கு எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டர்ன் என்பது குறித்து பார்க்கலாம்.

Published on: March 23, 2026 at 9:29 am
சென்னை மார்ச் 23, 2026; இன்றைய காலகட்டத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு, பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்படுகிறது; இந்த முதலீட்டில் ரிஸ்க் குறைவு என்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்; எனினும் இது போன்ற முதலீட்டைத் தொடர்வதற்கு முன் வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதங்கள் குறித்து தெரிந்து கொள்வது அவசியம்.
ஏனெனில் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை பொருத்தமட்டில் வங்கிகள் பல்வேறு விதமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன; குறிப்பாக பெண்களுக்கு ஒரு வட்டி விகிதம், மூத்த குடி மக்களுக்கு ஒரு வட்டி விகிதம் இதில் கடைபிடிக்கப்படுகிறது. இதுவும் வங்கிகளுக்கு வங்கி மற்றும் காலங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
இந்த நிலையில் வங்கிகள் வழங்கும், ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்; இதில் 1 முதல் 5 ஆண்டு கால பிக்சட் டெபாசிட்டுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள்
ஜனா சிறு நிதி வங்கி, 1 வருடம் முதல் 5 வருடம் வரை உள்ள காலத்திற்கு, ஆண்டுக்கு அதிகபட்சம் 8.25% வட்டி விகிதத்தில் நிலையான வைப்பு (Fixed Deposit) வழங்குகிறது.
ஈசாப் (ESAF) சிறு நிதி வங்கி, 1 வருடம் முதல் 5 வருடம் வரை உள்ள காலத்திற்கு, ஆண்டுக்கு அதிகபட்சம் 8.00% வட்டி விகிதத்தில் நிலையான வைப்பு வழங்குகிறது.
சிவாலிக் சிறு நிதி வங்கி, 1 வருடம் முதல் 5 வருடம் வரை உள்ள காலத்திற்கு, ஆண்டுக்கு அதிகபட்சம் 7.80% வட்டி விகிதத்தில் நிலையான வைப்பு வழங்குகிறது.
உத்கர்ஷ் சிறு நிதி வங்கி, 1 வருடம் முதல் 5 வருடம் வரை உள்ள காலத்திற்கு, ஆண்டுக்கு அதிகபட்சம் 7.50% வட்டி விகிதத்தில் நிலையான வைப்பு (Fixed Deposit) வழங்குகிறது.
உஜ்ஜிவன் சிறு நிதி வங்கி, 1 வருடம் முதல் 5 வருடம் வரை உள்ள காலத்திற்கு, ஆண்டுக்கு அதிகபட்சம் 7.45% வட்டி விகிதத்தில் நிலையான வைப்பு வழங்குகிறது.
இக்விடாஸ் (Equitas) சிறு நிதி வங்கி, 1 வருடம் முதல் 5 வருடம் வரை உள்ள காலத்திற்கு, ஆண்டுக்கு அதிகபட்சம் 7.40% வட்டி விகிதத்தில் நிலையான வைப்பு வழங்குகிறது.
ஏ.யூ. (AU) சிறு நிதி வங்கி, 1 வருடம் முதல் 5 வருடம் வரை உள்ள காலத்திற்கு, ஆண்டுக்கு அதிகபட்சம் 7.10% வட்டி விகிதத்தில் நிலையான வைப்பு (Fixed Deposit) வழங்குகிறது.
இதையும் படிங்க; பான் கார்டு விதிகளில் மாற்றம்: புதிய வழிகாட்டுதல்களை தெரிஞ்சுக்கோங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com