ரூ.15 ஆயிரம் எஸ்.ஐ.பி., ரூ.21 லட்சம் ரிட்டன்.. டாப் 5 ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட்கள்!

Top 5 Small Cap Mutual Fund Schemes: ரூ.15 ஆயிரம் எஸ்.ஐ.பி, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.21 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், டாப் 5 ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

Published on: June 18, 2025 at 8:59 pm

சென்னை, ஜூன் 18 2025: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கண்டுவருகின்றன. இந்தத் திட்டங்களில் பெரும்பாலும் வயது வித்தியாசமின்றி தற்போது முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டை தொடர்கின்றனர். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் டாப் ரிட்டன் கொடுத்த 5 ஸ்மால் கேப் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம். இந்தப் ஃபண்ட்கள் மார்க்கெட்டில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்துள்ளன.

ரூ.15 ஆயிரம் மாதாந்திர எஸ்.ஐ.பி ரிட்டன்

வ.எண் மியூச்சுவல் ஃபண்ட் பெயர் 5 ஆண்டுகால ரிட்டன் (ரூ)
01பந்தன் ஸ்மால் கேப் ஃபண்ட்ரூ.21,17,000
02 குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் ரூ.19,33,000
03 இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்ரூ.18,82,000
04 நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் ரூ.18,66,000
05 டாடா ஸ்மால் கேப் ஃபண்ட்ரூ.17,91,000

ஸ்மால் கேப் ஃபண்ட்களின் ரிட்டன் (%)

இந்தப் ஃபண்ட்களில் பந்தன் ஸ்மால் கேப் ஃபண்ட் கடந்த 5 ஆண்டுகளில் அதிகப்பட்சமாக 36.27 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்துள்ளது. இந்தப் ஃபண்ட்டின் செலவின விகிதம் 0.39 சதவீதமாக உள்ளது. இந்தப் ஃபண்டில் குறைந்தப்பட்சம் ரூ.500 முதல் எஸ்.ஐ.பி திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதேநேரம், குறைந்தப்பட்சம் லம்ப்சம் முதலீடு ரூ.1,000 ஆகும்.

குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட்

குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 31.42 சதவீத ரிட்டன் கிடைத்துள்ளது. இந்தப் ஃபண்டின் செலவின விகிதம் 0.66 சதவீதமாக உள்ளது. இந்தத் திட்டத்தில் குறைந்தப்பட்சம் எஸ்.ஐ.பி ரூ.1,000 ஆகவும், குறைந்தப்பட்சம் லம்ப்சம் முதலீடு ரூ.5 ஆயிரமாகவும் உள்ளது.

இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்

இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டத்தின் செலவின விகிதம் 0.44 சதவீதம் ஆகும். இத்திட்டத்தில் குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி ரூ.500 ஆகவும், லம்ப்சம் முதலீடு ரூ.1,000 ஆகவும் உள்ளது. இந்தத் திட்டத்தின் ஆண்டு ரிட்டன் 25.99 சதவீதமாக உள்ளது.

இதையும் படிங்க : 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்: 24 வங்கிகளின் வட்டி விகிதம்.. எதில் பெஸ்ட் ரிட்டன்?

நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்

நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டத்தில் ஆண்டு ரிட்டன் 25.76 சதவீதமாக உள்ளது. இதன் செலவின விகிதம் 0.65 சதவீதம் ஆகும். இந்தத் திட்டத்தில் குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி ரூ.500 ஆகவும், லம்ப்சம் முதலீடு ரூ.1,000 ஆகவும் காணப்படுகிறது.

டாடா ஸ்மால் கேப் ஃபண்ட்

டாடா ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டத்தில் ஆண்டு ரிட்டன் 25.80 சதவீத ரிட்டன் கிடைத்துள்ளது. இந்தப் ஃபண்டின் செலவின விகிதம் 0.34 சதவீதம் ஆகும். இத்திட்டத்தில் குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி முதலீடு ரூ.500 ஆக காணப்படுகின்றது. இத்திட்டத்தில் மாதம் ரூ.15 ஆயிரம் எஸ்.ஐ.பி, 5 ஆண்டுகளில் ரூ.17 லட்சத்து 91 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

Disclaimer: (மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீட்டுக்கு முன்னர் செபி (இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம்) அங்கீகரித்த முதலீட்டு நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது. முதலீட்டாளர்களின் லாப, நஷ்டங்களுக்கு திராவிடன் டைம்ஸ் பொறுப்பேற்காது)

இதையும் படிங்க :தங்கத்தை வாங்கிக் குவிக்கும் இந்தியா.. 2025 மார்ச்சில் மட்டும் இறக்குமதி இவ்வளவா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com