Defence Mutual funds: கடந்த 6 மாதத்தில் 30 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த டிஃபென்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்கள் திட்டங்கள் தெரியுமா? இந்த பெஸ்ட் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம்.
Defence Mutual funds: கடந்த 6 மாதத்தில் 30 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த டிஃபென்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்கள் திட்டங்கள் தெரியுமா? இந்த பெஸ்ட் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம்.
Published on: June 27, 2025 at 9:32 pm
Updated on: June 27, 2025 at 9:41 pm
சென்னை, ஜூன் 27 2025: மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய பலரும் விரும்புகின்றனர். ஏனெனில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பெரும்பாலும் பணவீக்கத்தை சமாளிக்கின்றன என நம்பப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 6 மாதத்தில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த டிஃபென்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
மோதிலால் ஓஸ்வால் நிஃப்டி இந்தியா டிஃபென்ஸ் இ.டி.எஃப்
இந்த டிஃபென்ஸ் ஃபண்ட்கள் கடந்த 6 மாதத்தில் 32.43 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளன. ஆகஸ்ட் 21, 2024 அன்று தொடங்கப்பட்ட மோதிலால் ஓஸ்வால் நிஃப்டி இந்தியா டிஃபென்ஸ் இடிஎஃப் என்பது இந்தியாவின் வளர்ந்து வரும் பாதுகாப்புத் துறையைப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். எனினும், இந்தப் ஃபண்ட் ஹை-ரிஸ்க் வகையில் வருகிறது.
குரோவ் நிஃப்டி இந்தியா டிஃபென்ஸ் இடிஎஃப்
குரோவ் நிஃப்டி இந்தியா டிஃபென்ஸ் இடிஎஃப், அக்டோபர் 8, 2024 அன்று குரோவ் மியூச்சுவல் ஃபண்ட்டால் தொடங்கப்பட்டது. இது, நிஃப்டி இந்தியா டிஃபென்ஸ் டி.ஆர்.ஐ (Nifty India Defense TRI) குறியீட்டைக் கண்காணிக்கிறது.
மே 31, 2025 நிலவரப்படி, இந்த நிதி ரூ.183 கோடி மதிப்புள்ள சொத்துக்களை 0.43% செலவு விகிதத்துடன் நிர்வகிக்கிறது, இது நாட்டின் வளர்ந்து வரும் பாதுகாப்புத் துறையில் ஈடுபட விரும்பும் முதலீட்டாளர்களுக்கு முக்கிய முதலீடு ஆதாரமாக உள்ளது. இந்தப் ஃபண்ட் 32.07 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது.
மோதிலால் ஓஸ்வால் இந்தியா டிஃபென்ஸ் இன்டெக்ஸ் ஃபண்ட்
இந்த நிதி, ஜூலை 3, 2024 அன்று மோதிலால் ஓஸ்வால் மியூச்சுவல் ஃபண்டால் தொடங்கப்பட்ட ஒரு முதலீட்டு திட்டமாகும். இந்த நிதி 13.27% வருமானத்தை ஈட்டியுள்ளது, இது நிஃப்டி இந்தியா டிரிஃப்ஸ் டிஆர்ஐ குறியீட்டைக் கண்காணிக்கிறது.
ஹை-ரிஸ்க் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் கீழ் இது வருகிறது. இதன் ரிட்டன் 31.92 சதவீதம் ரிட்டன் ஆகும்.
குரோவ் நிஃப்டி இந்தியா டிஃபென்ஸ் இ.டி.எஃப் எஃப்.ஓ.எஃப்
குரோவ் நிஃப்டி இந்தியா டிஃபென்ஸ் இ.டி.எஃப் எஃப்.ஓ.எஃப் திட்டம் 31.67 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்துள்ளது. இந்தப் ஃபண்ட் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.
ஆதித்யா பிர்லா சன் லைஃப் இந்தியா டிஃபென்ஸ் இன்டெக்ஸ் ஃபண்ட்
ஆதித்யா பிர்லா சன் லைஃப் இந்தியா டிஃபென்ஸ் இன்டெக்ஸ் ஃபண்ட் 2024 ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தப் ஃபண்ட் 31.59 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது.
Disclaimer: (மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீட்டுக்கு முன்னர் செபி (இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம்) அங்கீகரித்த முதலீட்டு நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது. முதலீட்டாளர்களின் லாப, நஷ்டங்களுக்கு திராவிடன் டைம்ஸ் பொறுப்பேற்காது)
இதையும் படிங்க : ரூ.15 ஆயிரம் எஸ்.ஐ.பி., ரூ.21 லட்சம் ரிட்டன்.. டாப் 5 ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com