Top 10 mutual fund schemes: கடந்த 10 ஆண்டுகளில் 26 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த டாப் 10 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் வருவாய் விவரங்கள் இங்கு உள்ளன. இந்த பண்டுகள் 26 சதவீதம் வரை ரிட்டர்ன் கொடுத்துள்ளன.
Top 10 mutual fund schemes: கடந்த 10 ஆண்டுகளில் 26 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த டாப் 10 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் வருவாய் விவரங்கள் இங்கு உள்ளன. இந்த பண்டுகள் 26 சதவீதம் வரை ரிட்டர்ன் கொடுத்துள்ளன.
Published on: May 17, 2025 at 4:19 pm
சென்னை, மே 17 2025: மியூச்சுவல் ஃபண்ட் திட்ட முதலீடுகள் இந்தியாவில் தற்போது அதிகரித்து காணப்படுகின்றன. இவற்றில் சில திட்டங்கள் குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தை வழங்கி உள்ளது. சிலவற்றில் மாதம் ₹10,000 முதலீடு செய்த சில ஃபண்டுகள் ₹47 லட்சம் வரை வளர்ச்சி பெற்றுள்ளன.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த SIP (Systematic Investment Plan) வருமானங்களை வழங்கிய டாப் 10 மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
குவாண்ட் ஸ்மோல் கேப் ஃபண்ட்
குவாண்ட் ஸ்மோல் கேப் ஃபண்ட், 10 ஆண்டுகளில் 25.93% வரை வருடாந்திர வருமானம் (XIRR) அளித்துள்ளது. ரூ.10 லட்சத்தில் முதலீட்டு மதிப்புடன் தொடங்கப்பட்ட ரூ.10000 மாதாந்திர எஸ்ஐபி இப்போது ரூ. 47.45 லட்சமாக உள்ளது.
மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட்
மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட் 10 ஆண்டுகளில் 23.5% வருடாந்திர வருமானம் (XIRR) அளித்துள்ளது. ரூ.10 லட்சத்தில் முதலீட்டு மதிப்புடன் தொடங்கப்பட்ட ரூ.10000 மாதாந்திர எஸ்ஐபி இப்போது ரூ. 41.54 லட்சமாக உள்ளது.
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் 10 ஆண்டுகளில் 23.04% வருடாந்திர வருமானம் (XIRR) அளித்துள்ளது. ரூ.10 லட்சத்தில் முதலீட்டு மதிப்புடன் தொடங்கப்பட்ட ரூ.10000 மாதாந்திர எஸ்ஐபி இப்போது ரூ. 40.96 லட்சமாக உள்ளது.
குவாண்ட் ELSS டேக்ஸ் சேவர் ஃபண்ட்
இந்த ELSS ஃபண்ட் 10 ஆண்டுகளில் 23.17% வருடாந்திர வருமானம் (XIRR) அளித்துள்ளது. ரூ.10 லட்சத்தில் முதலீட்டு மதிப்புடன் தொடங்கப்பட்ட ரூ.10000 மாதாந்திர எஸ்ஐபி இப்போது ரூ. 40.88 லட்சமாக உள்ளது.
எஸ்பிஐ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட்
இந்த ஃபண்ட் 10 வருட SIP வருடாந்திர வருமானம் 20.14 சதவீதம் அளித்துள்ளது. ரூ.10000 மாதாந்திர SIP இப்போது ரூ.40.8 லட்சமாக உள்ளது.
எஸ்பிஐ PSU ஃபண்ட்
இந்த ஃபண்ட் 10 வருட SIP வருடாந்திர வருமானம் 18.35 சதவீதத்தை அளித்துள்ளது. ரூ.10000 மாதாந்திர SIP இப்போது ரூ. 40.8 லட்சமாக உள்ளது.
குவாண்ட் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்
குவாண்ட் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் 10 வருட SIP வருடாந்திர வருமானம் 22.49 சதவீதத்தை அளித்துள்ளது. ரூ.10 லட்சத்தில் முதலீட்டு மதிப்புடன் தொடங்கப்பட்ட ரூ.10000 மாதாந்திர எஸ்ஐபி இப்போது ரூ. 40.88 லட்சமாக உள்ளது.
எஸ்பிஐ டெக்னாலஜி ஆப்பர்சுனிட்டிஸ் ஃபண்ட்
எஸ்.பி.ஐ.யின் இந்த ஃபண்ட் 10 ஆண்டுகளில் 19.35% வருடாந்திர வருமானம் (XIRR) அளித்துள்ளது. சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்து, நிலையான வளர்ச்சியை பெற்றுள்ளது. ரூ.10 லட்சத்தில் முதலீட்டு மதிப்புடன் தொடங்கப்பட்ட ரூ.10000 மாதாந்திர எஸ்ஐபி இப்போது ரூ. 36.14 லட்சமாக உள்ளது.
எஸ்பிஐ கான்ட்ரா ஃபண்ட்
எஸ்.பி.ஐ.யின் இந்த ஃபண்ட் 10 ஆண்டுகளில் 20.6% வருடாந்திர வருமானம் (XIRR) அளித்துள்ளது. சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்து, நிலையான வளர்ச்சியை பெற்றுள்ளது. ரூ.10 லட்சத்தில் முதலீட்டு மதிப்புடன் தொடங்கப்பட்ட ரூ.10000 மாதாந்திர எஸ்ஐபி இப்போது ரூ. 35.78 லட்சமாக உள்ளது.
எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட்
எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் 10 ஆண்டுகளில் 20.6% வருடாந்திர வருமானம் (XIRR) அளித்துள்ளது. ரூ.10 லட்சத்தில் முதலீட்டு மதிப்புடன் தொடங்கப்பட்ட ரூ.10000 மாதாந்திர எஸ்ஐபி இப்போது ரூ. 35.61 லட்சமாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஃபண்டுகள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களில் முதலீடு செய்து, அதிக வருமானங்களை பெற்றுள்ளன. மாதம் ₹10,000 முதலீடு செய்திருந்த, சில ஃபண்டுகள் ₹47 லட்சம் வரை வளர்ச்சி பெற்றுள்ளன. இது, நீண்ட கால முதலீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
முதலீடு செய்யும் முன், உங்கள் முதலீட்டு இலக்குகள், பாதுகாப்பு, அபாயம் மற்றும் முதலீட்டு காலம் போன்றவற்றை பரிசீலித்து முதலீடு செய்வது அவசியம். நிதி ஆலோசகரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
Disclaimer: (மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீட்டுக்கு முன்னர் செபி (இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம்) அங்கீகரித்த முதலீட்டு நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது. முதலீட்டாளர்களின் லாப, நஷ்டங்களுக்கு திராவிடன் டைம்ஸ் பொறுப்பேற்காது)
இதையும் படிங்க முதலீட்டுக்கு 20% மேல் ரிட்டன்; டாப் 10 மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com