Shriram Finance FD rates: ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டுள்ளன. தற்போது, 8.40 சதவீதம் வரை வட்டி விகிதம் கிடைக்கிறது.
Shriram Finance FD rates: ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டுள்ளன. தற்போது, 8.40 சதவீதம் வரை வட்டி விகிதம் கிடைக்கிறது.
Published on: April 30, 2025 at 8:31 pm
சென்னை, ஏப்.30 2025: ஸ்ரீராம் குழுமத்தின் கீழ் இயங்கும் ஒரு வங்கி அல்லாத நிதி நிறுவனமான (என்.பி.எஃப்.சி) ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் (SFL) ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்தத் திருத்தப்பட்ட வட்டி விகிதம் 2025 மே 2ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அந்த வகையில், ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம், 25 அடிப்படை புள்ளிகள் திருத்தப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தைக் குறைத்ததன் காரணமாக புதிய விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய திருத்தத்தின்படி, 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 0.50% கூடுதல் வட்டி கிடைக்கும்.
மேலும், பெண் வைப்புத்தொகையாளர்கள் ஆண்டுக்கு 0.10% கூடுதல் வட்டிக்கு தகுதியுடையவர்கள், மேலும் அனைத்து ஃபிக்ஸட் டெபாசிட் புதுப்பித்தல்களுக்கும் ஆண்டுக்கு 0.25% கூடுதல் வட்டி வழங்கப்படும்.
ஸ்ரீராம் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்
வ.எண் | ஃபிக்ஸட் டெபாசிட் காலம் | வட்டி விகிதம் (%) |
---|---|---|
01 | 12 மாதம் | 7.65 |
02 | 15 மாதங்கள் (டிஜிட்டல் மட்டும்) | 7.90 |
03 | 18 மாதம் | 7.80 |
04 | 24 மாதம் | 7.90 |
05 | 36 மாதம் | 8.40 |
06 | 50 மாதம் | 8.40 |
07 | 60 மாதம் | 8.40 |
Disclaimer: (இந்தச் செய்தி தகவலுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. முதலீடுக்கு முன் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் முதலீடு குறித்து முழுவதுமாக கேட்டு தெரிந்துக்கொள்ளவும். முதலீட்டாளரின் லாப நஷ்டங்களுக்கு திராவிடன் டைம்ஸ் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது)
இதையும் படிங்க கனரா வங்கி ஆட்டோ, ஹோம் லோன் வட்டி குறைப்பு.. வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com