Share Market Today: இன்றைய பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 73,134.69 புள்ளிகளில் முடிந்தது; இது, 1,187 புள்ளிகள் உயர்வு ஆகும்.
Share Market Today: இன்றைய பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 73,134.69 புள்ளிகளில் முடிந்தது; இது, 1,187 புள்ளிகள் உயர்வு ஆகும்.

Published on: April 1, 2026 at 4:49 pm
மும்பை, ஏப்.1, 2026: இன்றைய பங்கு வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 73,134.69 புள்ளிகளில் முடிந்தது. இது, 1,187 புள்ளிகள் உயர்வு ஆகும்; தொடர்ந்து, தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 22,680.50 புள்ளிகளில் காணப்பட்டது. இது, 349 புள்ளிகள் உயர்வு ஆகும். எனினும், இன்ட்ராடே வர்த்தகத்தில் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிந்தது, நிப்டி 22,700-க்கு கீழே சென்றது.
இன்றைய வர்த்தகம்
மேலும், இன்றைய வர்த்தகத்தில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) மற்றும் வங்கி பங்குகள் அதிக அழுத்தத்தில் இருந்தன; எனினும், எனர்ஜி மற்றும் எஃப்.எம்.சி.ஜி பங்குகள் சிறிது ஆதரவு தந்தன.
இதற்கிடையில், நிஃப்டி-க்கு 487 மில்லியன் பங்குகள் பரிமாற்றமும், சென்செக்ஸ்-க்கு 19.8 மில்லியன் பங்குகள் பரிமாற்றமும் நடந்தது.
மும்பை பங்குச் சந்தையை பொறுத்தவரை, காலை வலுவாக தொடங்கி 73,964 புள்ளிகளை எட்டியது. ஆனால் பிற்பகலில் 800 புள்ளிகள் சரிந்து 73,134-ல் முடிந்தது.
பாதிப்பு ஏன்?
அமெரிக்க சந்தை மற்றும் எண்ணெய் விலை மாற்றங்கள் இந்திய சந்தையை பாதிக்கின்றன. இதுபோன்ற சமயங்களில், நீண்டகால முதலீட்டாளர்கள் விற்பனையை தவிர்க்க வேண்டும் என பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: 1 முதல் 5 ஆண்டு கால எஃப்.டி முதலீடு.. எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com